வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஏ ஆர் முருகதாஸை உருவ கேலி செய்த அஜித்.. உண்மையான முகத்திரையை கிழித்தெறிந்த அந்தணன்

Ajith Real Face Revealed: அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களின் பட்டியலை எடுத்தால் அது நீண்டு கொண்டே போகும். ஆனால் அவரை தல என்று ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாட காரணமாக இருந்தது ஏ ஆர் முருகதாஸின் தீனா படம் தான்.

மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அப்படத்தை அடுத்து இவர்களின் கூட்டணி மீண்டும் இணைய இருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக அப்படம் பாதியிலேயே நின்று போனது. அதன் பிறகு ஏ ஆர் முருகதாஸ் அஜித் கூட்டணி இதுவரை இணையவில்லை.

இதற்கு பின்னணியில் அஜித் ஏ ஆர் முருகதாஸ் மீது கோபமாக இருக்கிறார் என்ற காரணமும் சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது வலைப்பேச்சு பிரபலம் அந்தணன் வெளியிட்டுள்ள ஒரு தகவல் நம்பவே முடியலையே என அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது.

Also read: அஜித் போன் பண்ணியும் கால் எடுக்காத நடிகர்கள்.. இதனால் தான் யாரையும் மதிப்பதில்லை ஏகே

அதாவது தீனா படத்திற்கு பிறகு அஜித் ஏ ஆர் முருகதாஸ் இருவரும் ஒரு படத்தில் இணைந்திருக்கின்றனர். அப்போது அஜித் தயாரிப்பாளரிடம் ஏ ஆர் முருகதாஸ் சம்பளத்தை பற்றி கேட்டிருக்கிறார். ஏனென்றால் தீனா படத்தின் போது அவருக்கு சில லட்சம் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த கேள்வியை தொடர்ந்து ஒரு கோடி சம்பளம் என சொல்லி இருக்கின்றனர். உடனே அஜித் சிரித்துக் கொண்டே அந்த ஒரு கோடியை அடுக்கி வையுங்கள். ஏ ஆர் முருகதாஸ் அதைவிட உயரமாக இருந்தால் கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதைப்பற்றி கூறிய அந்தணன் உண்மையிலேயே நல்ல மனிதனாக இருந்தால் தனக்கு ஹிட் கொடுத்த இயக்குனர் வளர வேண்டும் என்றுதான் நினைத்திருப்பார்கள்.

ஆனால் அஜித் அப்படி செய்யாமல் எதற்கு இவ்வளவு சம்பளம் தருகிறீர்கள் என கேட்டிருக்கிறார். இதிலிருந்தே அவருடைய உண்மையான முகத்திரை வெளியில் வந்து இருக்கிறது. இவரைத்தான் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என அந்தணன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also read: விஜயகாந்த் மறைவுக்கு வராததற்கு இப்படி ஒரு காரணமா.? அஜித்தை பற்றி பரபரப்பை கிளப்பிய பிரபலம்

Trending News