ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஆன்ட்டி இந்தியன் வாங்காத விருதுகளா? வயிற்றெரிச்சலில் விஜய் சேதுபதியை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்

தமிழ் சினிமாவில் எதார்த்தமான ஒரு நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி இந்த கதாபாத்திரம் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் சவாலான கேரக்டரை தேர்ந்தெடுத்த நடித்து வருகிறார். அதில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், கேமியோ ரோல் என அனைத்திலும் நடித்து தன் முத்திரையை பதித்துக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக இவர் படங்கள் தோல்வியை தழுவினாலும் இவருக்கான மவுசு அப்படியேதான் இருக்கிறது.

ஆனாலும் இவரைப் பற்றி சில சர்ச்சையான விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் தற்போது இவரை குறித்து தெரிவித்துள்ள ஒரு கருத்து ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. ஒரே ஒரு படம் இயக்கிவிட்டு ஆஸ்கர் விருது வாங்கிய ரேஞ்சுக்கு அலப்பறை கொடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் இப்போது விஜய் சேதுபதிக்கு கிடைத்த விருதை பற்றி விமர்சித்துள்ளார்.

Also read: விஜய்யை வாண்டடா வம்பு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. ரெய்டிற்கு பிறகு புலி பாயுமா? பதுங்குமா?

சமீபத்தில் சென்னையில் இருபதாவது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதில் பல்வேறு திரைப்படங்களும் திரையிடப்பட்டது. அதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. அதில் திரை துறையில் சாதித்த பல்வேறு கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்வில் மாமனிதன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

அந்த விருது குறித்து தான் ப்ளூ சட்டை மாறன் தற்போது சோசியல் மீடியாவில் புலம்பி இருக்கிறார். அதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கும் சத்தியம் தியேட்டரில் ஒரு வாரமாக குட்டி போட்ட பூனை போல் சுற்றி விழா கமிட்டி, அமைச்சர் ,ஜூரி என பலரிடமும் நச்சரித்து விஜய் சேதுபதி இந்த விருதை வாங்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதெல்லாம் ஒரு பொழப்பா என பலரும் காரி துப்பி வருகிறார்கள் என மோசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Also read: பார்த்திபனை மீண்டும் சீண்டிய ப்ளூ சட்டை மாறன்.. 84 நாமினேஷனில் 32 விருது வாங்கிய ஒரே தமிழ் படம் இதுதான்

இதை பார்த்த ரசிகர்கள் அவரை சோசியல் மீடியாவில் வெளுத்து வாங்கி வருகின்றனர். உங்கள் ஆண்ட்டி இந்தியன் படம் எத்தனை விருது வாங்கி விட்டது. அடுத்தவரின் உழைப்பை கொச்சைப்படுத்துவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என அவரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி வருகின்றனர். பொதுவாகவே ப்ளூ சட்டை மாறன் அடுத்தவரை குறை சொல்வதையே பிழைப்பாக வைத்துக் கொண்டு பப்ளிசிட்டி தேடி வருகிறார்.

பிறரை குறை சொல்வதற்கு முன் நீங்கள் ஒரு படம் எடுத்துக்காட்டுங்கள் என்று வந்த விமர்சனத்தால் ஆன்டி இந்தியன் என்ற ஒரு படத்தை அவர் இயக்கி நடித்திருந்தார். ஆனால் அந்த படம் வந்த வேகத்திலேயே தியேட்டரை விட்டு ஓடியது ஆனாலும் அடங்காத ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய படம் வெற்றி பெறவில்லையே என்ற வயிற்றெரிச்சலில் அனைவரையும் குறை சொல்லி வருகிறார். இதற்கு முன்னதாக அவர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தையும் குறை சொன்னது குறிப்பிடத்தக்கது.

Also read: ப்ளூ சட்டை மாறனை மறைமுகமாக திட்டிய அசோக் செல்வன்.. வருஷத்துக்கு 5 பிளாப் செம ரெக்கார்டு

Trending News