சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நரக வேதனையை காட்டிய காதலன்.. திருமணத்தையே வெறுக்கும் ஆன்ட்டி நடிகை

ஹீரோயின்கள் மார்க்கெட் இருக்கும் வரை நன்றாக சம்பாதித்து விடுவார்கள். அதன் பின்பு வெளிநாட்டு மாப்பிள்ளையை பார்த்து செட்டில் ஆகி விடுவது வழக்கம் தான்.

அதில் சிலர் குடும்பம், குழந்தை என இருப்பார்கள். ஆனால் பல பேர் விவாகரத்தை தேடி தான் ஓடுவார்கள். இது இப்படி இருக்க கல்யாணமே வேண்டாம் என இருக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

அப்படித்தான் அந்த வடநாட்டு நடிகை 40 வயதை தாண்டியும் சிங்கிளாக இருக்கிறார். இதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட மோசமான காதல் அனுபவம் தான்.

மார்க்கெட் உச்சத்தில் இருந்த இந்த நடிகைக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்து போனது. அதனால் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு வந்தார். ஆனால் அதுவும் நீடிக்கவில்லை.

அதையடுத்து அம்மா ரோலில் தலை காட்டினார். தற்போது அந்த வாய்ப்புகளும் இல்லாத நிலையில் சோசியல் மீடியாவில் பலான போட்டோவை போட்டு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

இதனாலயே நடிகையின் பெயர் ரொம்பவும் டேமேஜ் ஆகி இருக்கிறது. இதை பார்த்த நடிகை நான் தப்பான தொழில் செய்யவில்லை. இதன் மூலம் எனக்கு வருமானம் வருகிறது. அவ்வளவுதான் என நெருக்கமானவர்களிடம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறாராம்.

Trending News