வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அனுராக் காஷ்யப்பால் அக்கடதேச சீரும் புலியை பிடித்த தமிழ் இயக்குனர்.. ஒரே படத்தால் சரண்டரான வில்லன்

Anurag Kashyap: சினிமாவில் ஹீரோவுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கிடைக்கிறதோ, அதே மாதிரி வில்லன்களுக்கும் இருந்தால் மட்டும் தான் அந்த படம் மக்களிடம் ரீச் ஆக முடிகிறது. அப்படி தமிழில் வந்த ஒரு சில படங்களில் மூலம் வில்லனாக அறியப்பட்டவர் தான் அனுராக் காஷ்யப். இயக்குனராக ஒரு சில படங்களில் இயக்கி பயணித்தவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் கொடூர வில்லத்தனத்தை காட்டி மிரட்டி இருப்பார். அத்துடன் லியோ படத்தில் ஒரு சில நிமிடத்தில் இவருடைய காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதனால் கொஞ்சம் ஆக்ரோஷமான இவர் இனி என்னுடைய நேரத்தை தேவையில்லாமல் செலவிட மாட்டேன் என்று பதிவிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழில் டிமாண்டி காலனி படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர்தான் அஜய் ஞானமுத்து. இவர்தான் நயன்தாராவை வைத்து இமைக்கா நொடிகள் படத்தை எடுத்தார். அதன்மூலம் அனுராக்கும் இந்த இயக்குனருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டு விட்டது. இந்த நெருக்கத்தினால் அனுராக் இவரை அக்கட தேசத்து நடிகரிடம் கோர்த்துவிட்டார்.

அக்கட தேசத்துக்கு கால் தடம் பதிக்க போகும் இயக்குனர்

அதாவது அக்கட தேசத்தில் சீரும் புலியும் ஆக பாய்ந்து கொண்டு வரும் ஜூனியர் என்டிஆர் இடம் அஜய் ஞானமுத்துவை பற்றி சொல்லி ஒரு படத்தை சிபாரிசு பண்ணிருக்கிறார். அந்த வகையில் அனுராக் சொன்னதும் ஜூனியர் என்டிஆர் ரும் ஓகே தெரிவித்து விட்டார். இதனால் இவர்களுடைய கூட்டணியில் ஒரு படம் உருவாகப் போகிறது.

ஒரு படத்தின் மூலம் இயக்குனர் அஜய் ஞானமுத்திடம் அனுராக் சரண்டர் ஆகி விட்டார். அதே மாதிரி இவர் சொன்னதும் ஜூனியர் என்டிஆர் அவருடைய சம்மதத்தை கொடுத்தது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் அஜய் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் கோப்ரா. இந்த படம் ஒரு தோல்வி படமாக தான் முத்திரை பதித்திருக்கிறது. அந்த வகையில் அக்கட தேசத்திற்கு போகும் இயக்குனர் எந்த மாதிரியான படைப்பை கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

Trending News