திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

உச்ச நட்சத்திரங்களுடன் கலக்கிய அனுஷ்காவிற்கு இப்படி ஒரு நிலைமையா.? ரீ என்ட்ரியில் செய்யும் வேலை

உச்ச நட்சத்திரங்களாக உள்ள விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் அனுஷ்கா. அவருடைய உயரமும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாகி இருந்தார்.

அதன் பிறகு உடல் எடையை குறைப்பதற்காக அனுஷ்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அதில் இருந்து ஓரளவு உடல் எடையை குறைந்த பின்பு பாகுபலி படத்தில் அனுஷ்காவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதன்பிறகு அனுஷ்காவுக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இதைத்தொடர்ந்து தன்னுடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குனர்கள் என பலரையும் தூதுவிட்டும் அனுஷ்காவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் அனுஷ்கா இப்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறாராம். இதற்காக தற்போது தன் உடல் எடையில் பாதியாக குறைத்து உள்ளாராம்.

இதனால் தற்போது அனுஷ்கா பழையபடி ஒல்லியாக மாறிவிட்டார் என சூட்டிங்கில் இவருடன் பணியாற்றியவர்கள் இடமிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் ஒரு புதுமுக கதாநாயகன் அறிமுகமாக உள்ளாராம். அனுஷ்காவை விட மிகவும் இளையவராம்.

அனுஷ்கா தற்போது நடித்துவரும் படத்தின் கதைப்படி ஒரு இளவயது வாலிபனை அவனை விட கூடுதல் வயதுடைய ஒரு பெண் காதலிப்பது போன்ற கதையம்சமாம். அதனால்தான் அனுஷ்கா இந்தக் கதையில் நடித்து வருகிறாராம். தற்போது இவருக்கு பட வாய்ப்பு இல்லாததால் இது போன்ற புது முக நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுஷ்காவிற்கு இந்த நிலைமையா என அவரது ரசிகர்கள் புலம்பித் தவிக்கின்றனர். ஆனால் இந்த படம் அனுஷ்காவிற்கு தரமான கம்பேக் கொடுக்கும் என்றும் இதன் மூலம் அதிக பட வாய்ப்புகள் வரும் எனவும் கூறப்படுகிறது.

Trending News