புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சைலென்ட்டாக திருமணத்தை முடிக்க போகும் அருந்ததி.. பாவம் அப்போ பிரபாஸ் நிலைமை சோலி முடிஞ்சு!

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய ரசிகர்களை மொழி வேறுபாடின்றி தனது அழகாலும் நடிப்பாலும் கட்டிப் போட்டவர் நடிகை அனுஷ்கா. இவர் இரு மொழிகளிலும் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக, அருந்ததி, சிங்கம், பாகுபலி போன்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

அனுஷ்கா தெலுங்கில் வெளியான அருந்ததி படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கியிருந்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். 90’ஸ் கிட்கள் பயந்து அலரிய பேய் பட லிஸ்ட்டில் அருந்ததி படத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

பொம்மாயி என்ற வார்த்தையை கேட்டாலே அலறியவர்களும் உண்டு. பின் இந்த வெற்றியால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இந்த நிலையில், சமூக அக்கரையில், இவர் நல்லது நினைத்து நடித்த படமே, இவருக்கு எமனாக மாறியது. இதன்பின், நடிகர் ஆர்யாவுடன் ஃபிட்னஸ் விழிப்புணர்வு படமான இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அனுஷ்கா. டயட், சைக்கிளிங் போன்ற சின்ன சின்ன செய்கைகளின் மூலமே உடல் எடையை குறைக்க முடியும். ஜிம் எல்லாம் இல்லாமல், உடல் இடையை குறைக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்திய படம் இது.

ஆனால், உடல் எடையை வேகமாக ஏற்றிய அனுஷ்காவால் எடையை குறைக்க முடியவில்லை, இதற்காக படத்தில் கூறியவற்றையே செய்து பார்த்தும் வேலைக்கு ஆகாததால் மனமுடைந்தார். இதன் பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகளும் பெரிதாக வரவில்லை. பாஹுபலி படத்தில் மட்டும் தான் இவருக்கு பொருத்தமான கதாபாத்திரமாக இருந்தது.

இந்நிலையில், பல ஆண்டுகள் கழித்து அவர் தற்போது தெலுங்கில் முன்னணி இயக்குநரான கிரிஷின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடைசியாக நடிகை அனுஷ்கா கொடுத்த சூப்பர் ஹிட் படம் என்றால் அது பாகுபலி தான். இந்த நிலையில் தான், அவர் விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளார் என்றும். அனுஷ்காவிற்கு 40 வயதைக் கடந்து விட்டது என்பதால், அவரது குடும்பத்தினர் இந்த முறை நிச்சயம் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் பிரபாஸூம் அனுஷ்காவும் காதலித்து வருவதாக பல ஆண்டுகளாக வதந்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அனுஷ்காவிற்கு துபாய் தொழிலதிபர் ஒருவருடன் மிக வேகமாக திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் மனமுடைந்து விட்டனர். அப்போ பிரபாஸ் நிலைமை என்று அவருக்கு பதிலாக ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர். என்ன செய்வது அண்ணா அண்ணியாகவே பார்த்து விட்டார்கள் போலும்.

Trending News