புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Anushka: அனுஷ்காவை திருமணம் செய்ய போகும் 45 வயது பிரபலம்.. முடிவுக்கு வந்த தேவசேனாவின் கன்னி விரதம்!

Anushka Shetty: தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகி தமிழ்,தெலுங்கு,கன்னடம் என பல மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்தவர்தான் நடிகை அனுஷ்கா.

தமிழில் சுந்தர்சியின் ரெண்டு படத்தின் மூலம் அறிமுகமான அனுஷ்கா, தொடர்ந்து  ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பிசியான நடிகையாக வலம் வந்தார்.

தனது திறமையான நடிப்பாலும், தோற்றத்தாலும், நாயகனுக்கு நிகராக அதிக ஆளுமை தன்மை மிகுந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அனுஷ்கா, ராஜமௌலியின் பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

பாகுபலி படத்திற்கு பின் மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த அனுஷ்கா அதன் பின் இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் உடல் எடையை கூட்டி வாய்ப்புகள் அற்று காணாமல் போனார்.  

பின்னர் “மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலி ஷெட்டி” என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அனுஷ்கா, தற்போது ரம்யா கிருஷ்ணன் மற்றும் விக்ரம் பிரபு உடன் இணைந்து காதி என்ற திரைப்படத்தில் தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக அதிக ரசிகர்களை கொண்டுள்ள அனுஷ்காவிற்கு, அவரது திருமணம் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கின்றது.

தெலுங்கில் மிர்ச்சி, பாகுபலி போன்ற படங்களில் ஒன்றாக நடித்த, நடிகர் பிரபாஸுடன் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டார் அனுஷ்கா.

விழாக்களில் அடிக்கடி ஒன்றாக தோன்றிய பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும், அவர்கள் பற்றிய சர்ச்சைகளுக்கு எந்த ஒரு கருத்தும், மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.

அதுமட்டுமில்லாமல் தெலுங்கு இயக்குனர் பிரகாசராவ், தனது மணமுறிவிற்கு பின் அனுஷ்காவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவியது. வந்த வேகத்தில் அந்த தகவலும் பொய்யாக போனது. முரட்டு சிங்கிளாக தனது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் அனுஷ்கா.

அனுஷ்காவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ள 45 வயது கன்னட பிரபலம்

அனுஷ்காவின் திருமணம் பற்றி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், கன்னட திரை உலகை சேர்ந்த 45 வயதான தயாரிப்பாளர் ஒருவருடன் திருமணம்  நிச்சயிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் திருமணம் என்று அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது. ஆனால் அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும்  வெளியிடப்படவில்லை. 

Trending News