Miss Shetty Mr Polishetty trailer: அனுஷ்கா ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்த நிலையில் சில வருடங்களிலேயே மார்க்கெட்டை இழந்தார். அதாவது ஆர்யாவின் நடிப்பில் வெளியான இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்த நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.
ஆனால் பாகுபலி படத்தில் தேவசேனாவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். அனுஷ்காவின் மாஸ்டர் பீஸ் பாகுபலி என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சில வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்த அனுஷ்கா தற்போது தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி இருக்கிறார்.
Also Read : அனுஷ்கா கிளுகிளுப்பாக ஆடிய 5 ஐட்டம் சாங்ஸ்.. தளபதியை மிரள விட்ட என் உச்சி மண்டையில
அதன்படி மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டு இருக்கிறது. இந்த படத்தில் செஃப்பாக இருக்கும் அனுஷ்கா ஸ்டாண்ட் அப் காமெடியன் மீது கவனம் ஈர்க்கப்படுகிறார்.
ஆனால் கல்யாணத்தின் மீது நம்பிக்கை இல்லாத அனுஷ்கா, குழந்தையை மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். இதற்கு ஹீரோ எவ்வாறு சம்மதிப்பார் என்ற காமெடி கலந்த கதைக்களமாக மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இப்போது இந்த ட்ரெய்லர் இணையத்தில் அதிகம் ட்ரெண்ட்டாகி வருகிறது.
Also Read : அனுஷ்காவை ஒருதலையாக காதலித்த பிரபல நடிகர்.. லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாரா தேவசேனா?
ஆனால் பாகுபலியில் தேவசேனா போன்ற துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்த அனுஷ்கா மோசமான கதையை தேர்ந்தெடுத்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த ரீ என்ட்ரி அவருக்கு கை கொடுக்குமா என்பது படம் வெளியானால் மட்டுமே தெரிய வரும். மகேஷ்பாபு இயக்கியுள்ள இப்படத்திற்கு ராதா என்பவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.