தனுஷ்சை விடுங்க வெற்றிமாறனுக்கு குடைச்சல் கொடுக்கும் சில்வண்டு.. நாராயணா! இந்த கொசு தொல்லை தாங்கல

வெற்றிமாறன், தனுஷ் பற்றிய பேச்சுக்கள் தான் இரண்டு நாட்களாக சமூக வலைதளத்தை ஆட்டிப் படைக்கிறது. இதற்கு வெற்றிமாறன் தரப்பிலிருந்து ஒரு வீடியோ வெளியிட்டு எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். எங்கள் இருவருக்கும் ஆரோக்கியமான நட்பு இருக்கிறது என பிரச்சனையை நிறுத்திவிட்டார்.

பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறனுக்கு புது பிரச்சனை ஒன்று கிளம்பி உள்ளது. தற்போது அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். கவின் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் மாஸ்க் என்ற ஒரு படத்தை தயாரிக்கிறார்.

புதுமுக இயக்குனர் விகமன் அசோக் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு கவின் குடைச்சல் கொடுத்து வருகிறார். இதனால் அவரது தலையீடு ஓவராக இருக்கிறது என நேராக தயாரிப்பாளர் வெற்றி மாறனிடமே புகார் அளித்துள்ளார் இயக்குனர். ஏற்கனவே கவின் இதற்கு முன்னர் நடித்த படங்களில் இப்படித்தான் செய்து வந்துள்ளார்.

கவின் நடித்த கிஸ் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அந்த படத்திற்கு பிரமோஷன் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்திலும் கவின் நிறைய பிரச்சனை செய்துள்ளார். டான்ஸ் மாஸ்டர் சாண்டி இடமும் பிரச்சனை செய்துள்ளார். அதனால் கோபப்பட்ட சாண்டி மாஸ்டரும் அப்செட்டில் இருக்கிறாராம்.

இப்பொழுது மாஸ்க் படத்திலும் ஓவராக தலையிட்டு வருவதால் நேராக சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுவிட்டாராம் வெற்றிமாறன். அங்கே இப்பொழுது இரண்டு நாட்கள் கவின் சைலன்டாக இருக்கிறாராம். வெற்றிமாறன் மேற்பார்வையில் தான் தற்போது மாஸ்க் படம் சூட்டிங் நடைபெறுகிறது.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →