வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

குணசேகரனை ஆட்டிப்படைக்க போகும் அப்பத்தா, எஸ் கே ஆர்.. வார்த்தையால் தாக்கிய ஜனனி

சீரியல் என்றாலே பெண்கள் மட்டும் தான் பார்ப்பார்கள் என்ற எண்ணத்தையே உடைத்து அனைவரையும் அடிமையாக்கியது என்றால் எதிர்நீச்சல் சீரியல். பொதுவாகவே ஒரு சீரியல் பார்க்கிறோம் என்றால் அடுத்து எந்த மாதிரியான காட்சிகள் வரும் என்று நம்மால் கணிக்க முடியும். அந்த அளவிற்கு தான் இதுவரை எல்லா சீரியலும் வந்திருக்கிறது. ஆனால் அதற்கு எதிர்மறையாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று கணிக்க முடியாத மாதிரி ஒவ்வொரு நாளும் கதைகள் வருவது தான் இந்த நாடகத்தின் சிறப்பு.

அந்த வகையில் ஆதிரை திருமணத்தை பகடைக்காயாக வைத்து குணசேகரன், அப்பத்தாவின் 40% ஷேருக்கு அடி போடுகிறார் என்று பார்த்தால் அந்த வீட்டில் ரேணுகா மற்றும் நந்தினி அந்த சொத்து நம்மளுக்கு கிடையாதா என்று நினைத்து மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது எஸ்கேஆர் தம்பிக்கும் அந்த சொத்து மேல் கண்ணு இருக்கிறது என்று பார்க்கும்போது கொஞ்சம் கடுப்பாக இருக்கிறது.

Also read: அண்ணியை அவமதித்த மாமனார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இணையுமா?

ஆனால் அப்பத்தா தெளிவாக இருக்கிறார். இந்த சொத்து என்னுடைய உரிமை இதை நான் யாருக்கு எப்போ என்ன பண்ணனும் என்று நான் தான் முடிவு பண்ணனும். ஆளுக்கு ஆளு இதைக் கேட்டு உரிமை கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும். என்று அப்பத்தா ஆதங்கத்தை ஜனனிடம் வெளிப்படுத்துகிறார். அத்துடன் ஜனனிடம் இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்கிறார்.

அதற்கு ஜனனி இது உங்கள் சொத்து நீங்க தான் முடிவு பண்ண வேண்டும் இதில் என்னுடைய கருத்து எதுவும் கிடையாது என்று கூறுகிறார். உடனே அப்பத்தா குணசேகரன் மற்றும் அரசு ஆடுகிற கேமை விட என்னுடைய ஆட்டம் பெருசாக இருக்கப் போகிறது. அதை நான் செய்யும் போது இவர்கள் எல்லாம் அடங்கிப் போய் விடுவார்கள். அந்த அளவுக்கு என்னுடைய திருவிளையாடல் இருக்கும் என்று கெத்தாக சொல்கிறார்.

Also read: 6 வருடங்கள் கழித்து காதலனை கரம் பிடித்த ரோஜா சீரியல் பிரியங்கா.. ட்ரெண்டாகும் போட்டோஸ்

அடுத்ததாக அப்பத்தாவிடம் விசாலாட்சி என்ன அத்தை அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டதற்கு அப்பத்தா உன் வீட்டுக்கு வந்த மருமகளை எந்த அளவுக்கு நீ நடத்தினாயோ அதற்கு பலனாக தான் இப்பொழுது உன் மகள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்று கூறுகிறார். பின்பு ஜனனி, குணசேகரனை பார்த்து எஸ்கேஆர் டீசண்டான பிஸ்னஸ் மேன் ஆனால் நீங்க அப்படியா என்று நக்கலாக குத்தி பேசுகிறார். உடனே குணசேகரன் நான் என்னம்மா சொல்லு என்று அவர் பாணியில் கேட்கிறார்.

பின்பு ஜனனிக்கும் சக்திக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆனதால் சக்தி அன்பை வெளிக்காட்டும் விதமாக ஜனனிக்கு ஒரு பரிசை கொடுத்து ஹேப்பி அனிவர்சரி என்று சொல்கிறார். அதற்கு ஜனனி அந்த கிப்டை வாங்கிட்டு எனக்கு என்ன சொல்ல வேண்டும் தெரியல சக்தி என்று கூறுகிறார். ஆனாலும் ஜனனிக்கு சக்தி மேல் அளவு கடந்த அன்பு இருப்பதால் கூடிய சீக்கிரத்தில் இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: குணசேகரனை நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட நந்தினி.. பதிலடி கொடுத்த ஜனனி

Trending News