Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினிக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணம் நடத்தி வைக்க வேண்டும் என்று குணசேகரன் மற்றும் உமையாள் பிளான் பண்ணி விட்டார்கள். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெறும் நேரத்தில் ராமசாமி, கரிகாலனிடம் சொன்ன படி பணத்தை கொடுக்கவில்லை.
இதனால் ஏமாற்றுத்துடன் நிற்கும் கரிகாலன், குணசேகரனுக்கும் ராமசாமிக்கும் நான் யார் என்று காட்டுகிறேன் என இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு முயற்சி எடுக்கிறார். அதே மாதிரி குணசேகரனின் மாமா மதுரை வீரன் ஜனனி போன் பேசும்போது கொடுத்த குளூ மூலம் மண்டபத்தை நெருங்கி விட்டார்கள்.
அத்துடன் இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு போலீஸிடமும் தகவல் கொடுத்து விட்டார்கள். அதே நேரத்தில் இதுவரை கமுக்கமாக இருந்த ஜீவானந்தம் இந்த மண்டபத்திற்கு வரப்போகிறார். அத்துடன் அப்பத்தாவையும் கூட்டிட்டு வரப் போகிறார்.
ஏற்கனவே அப்பதாவை கொலை முயற்சி பண்ணியது குணசேகரன் தான். ஜீவானந்தத்தின் மனைவி இறப்பிற்கு காரணமும் குணசேகரன் தான். அத்துடன் தற்போது சுயநினைவு இல்லாத தர்ஷினி ஒரு மைனர் என்றும் தெரிந்தும் திருட்டு கல்யாணத்தை பண்ணி வைக்க ஏற்பாடு பண்ண குற்றத்திற்காகவும் குற்றவை, குணசேகரனை அரெஸ்ட் பண்ண போகிறார்.
குணசேகரனின் கொட்டத்தை அடக்கிய மருமகள்கள்
இதுவரை எல்லா தில்லாலங்கடியும் பண்ணி தப்பித்துக் கொண்டிருந்த குணசேகரன் முதல் முறையாக தோற்றுப் போய் ஜெயிலில் கம்பி எண்ணப் போகிறார். இந்த நாடகம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் முதன் முறையாக குணசேகரன் தோற்று நான்கு மருமகள்களும் ஜெயிக்கப் போகிறார்கள்.
இதனை தொடர்ந்து மருமகள்கள் அவர்களுடைய கனவுகளை நிறைவேற்றும் விதமாக போராடி ஜெய்த்துக் காட்டப் போகிறார்கள். இவர்களுக்கு பக்க பலமாக இருந்து சப்போர்ட் பண்ண போவது கதிர், சக்தி மற்றும் ஞானம் தான். அராஜகத்தின் உச்சகட்டத்தை பண்ணிய குணசேகரனுக்கு தக்க தண்டனை கிடைக்கப் போகிறது.
அடுத்தபடியாக இன்னும் கொஞ்சம் நாட்களிலேயே இந்த நாடகத்திற்கு முடிவு கட்ட ஜீவானந்தம் முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் திருமுருகன் இயக்கத்தில் மெட்டிஒலி இரண்டாம் பாகம் வரும் பொழுது எதிர்நீச்சலுக்கு எண்டு கார்டு போட்டு விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.