iPhone 16 : ஆப்பிள் ஐபோன் மீது உள்ள மோகம் இளைஞர்களுக்கு இன்னும் தீர்ந்த பாடு இல்லை. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் மொபைல் ஃபோன்களில் பல வசதிகளை பெரிய நிறுவனங்கள் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் உலகமே ஐபோன் 16 சீரிஸ்க்காக காத்துக் கொண்டிருந்தது. அதன்படி ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 16, ஆப்பிள் வாட்ச் 10 மற்றும் ஏர்பட்ஸ் 4 சாதனங்களை வெளியிட்டு இருக்கிறது. அதிலும் பல சிறப்பம்சம் கொண்ட ஐபோன் 16-ன் விலை பிரமிக்க வைக்கிறது.
இதில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது என்பதை போது பார்க்கலாம். 6.1” இட்ஸ் சூப்பர் ரெட்டினா XDR கொண்ட டிஸ்ப்ளேவை பெற்றிருக்கிறது. இதன் பிக்சல் 1200×2600 ஆகும். 8 GB Ram + 128 GB/ 256 GB / 512 GB ஆகிய ஸ்டோரேஜ்களை கொண்டிருக்கிறது.
ஐபோன் 16 இன் விலை
ஐபோன் 16 மேம்படுத்தப்பட்ட A18 சிப் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் பேட்டரி 3561 mAh ஆகும். மிகத் தெளிவான கேமராவுக்காக 48MP+12MP பொருத்தப்பட்டிருக்கிறது. செல்பி கேமரா 12MP. மேலும் வேகமாக சார்ஜிங் ஏறும் வசதி மற்றும் 20 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜ்ங் உள்ளது.
ஐபோன் 16 விலை 79,900 ரூபாய், ஐபோன் 16 ப்ளஸ் 89,900, ஐபோன் 16 ப்ரோ 1,19,900 மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 1,44,900 ஆகும். பெரும்பாலான இளைஞர்கள் இப்போது இந்த மொபைல் ஃபோனை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மேலும் ஆப்பிள் இந்த ஃபோனை அறிமுகப்படுத்திய நிலையில் அமேசான் மற்றும் flipkart ஆகிய தளங்களில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 ஆகியவற்றின் விலை இப்போது குறைந்து இருக்கிறது. ஆகையால் அந்த ஃபோன்களையும் வாடிக்கையாளர்கள் வாங்கி வருகிறார்கள்.
வளர்ச்சி அடையும் தொழில்நுட்பம்