செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஆதிபுரூஷ் படத்திற்கு ஆப்பு வச்ச அல்லு அர்ஜுன்.. 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம்

டோலிவுட்டில் அதிரடி ஆக்ஷன் நாயகர்களாக இருக்கும் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் ஒரே சமயத்தில் ராமாயண கதையில் இருவரும் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விடுகின்றனர். ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் 500 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் ராமாயணத்தை தழுவி ரெடியாகி இருக்கும் பான் இந்தியா திரைப்படம்தான் ஆதிபுருஷ்.

இந்த படத்தை ஜனவரி 12ஆம் தேதி 3 டி, ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதில் ராமராக பிரபாசும், ராவணனாக சைஃப் அலி கானும் நடிக்கிறார்கள். மிகப் பெரிய பொருட் செலவில், இதுவரை கண்டிராத பிரம்மாண்ட படைப்பாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்திய சினிமாவில் விஃஎப்எக்ஸ் (VFX ) ஷாட்களை கொண்ட படமாக பாகுபலி ரெடியானது.

Also Read: போஸ்டருடன் வெளியானது ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி.. பிரபாஸ் பிறந்தநாளுக்கு கிடைத்த டபுள் ட்ரீட்

அந்த சாதனையை இந்த ஆதிபுருஷ் முந்தப்போகிறது. பாகுபலி 2 படத்தில் அதிகபட்சமாக 2500 விஷுவல் எஃபெக்ட் ஷாட்கள் வைக்கப்பட்டிருந்தது.  ஆதிபுருஷ் படத்தில் 8000 விஎஃப்எக்ஸ் ஷாட்கள் வைக்கப்பட்டுள்ளது என்கின்றனர். இந்த படத்திற்கு போட்டியாக அல்லு அர்ஜுன் 500 கோடி பொருட்செலவில் ராமாயணம் திரைப்படத்தில் நடிக்கிறார்.

ஒன்றரை வருடத்திற்கு முன்பு இந்தப் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் துவங்கப்பட்ட நிலையில், இன்னும் ஆறு மாதத்திற்குள் அவை நிறைவடைந்து அடுத்ததாக படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராக போகிறது.

Also Read: வசூலில் புதிய சாதனை படைத்த புஷ்பா.. எத்தனை கோடி தெரியுமா?

ஏற்கனவே அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி கண்ட நிலையில், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் படுஜோராக உருவாகி வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு அல்லு அர்ஜுன் அடுத்ததாக ராமாயணம் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே இராமாயணத்தைத் தழுவி எத்தனையோ படங்கள் வெளியானாலும் தெலுங்கு சூப்பர் ஸ்டாராக இருக்கும் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் ஒரே கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வெளியிடுவதால், இந்தப் படத்தில் எது சிறந்தது என்பதை வாதிடுவதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: இந்த ஆண்டு அதிக டிக்கெட்டுகளை விற்ற 10 படங்கள்.. முன்னணி திரையரங்கம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Trending News