வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இந்த வாரம் ஓடிடியில் படையெடுக்கும் தரமான 10 படங்கள்.. ஜெயம் ரவியின் சைரன் எதில் தெரியுமா?

Jayam Ravi : திரையரங்கை காட்டிலும் இப்போது ஓடிடியில் நிறைய படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 15 முதல் 21 வரை ஓடிடியில் வெளியாகும் தரமான 10 படங்களை இந்த லிஸ்டில் பார்க்கலாம்.

வைபவ் மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில் வெளியான ரணம் அறம் தவறேல் படம் பிப்ரவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்போது இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 19 ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

கைதியாக ஜெயம் ரவி மற்றும் போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான சைரன் படம் திரையரங்குகளில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

பதினாறு வயது நிரம்பிய சிறுவர்களான எமிலியோ மற்றும் பேபி ஆகியோரின் வாழ்க்கையை ஆராய்ந்து எடுக்கப்பட்ட படம் தான் சீ யூ இன் அனதர் லைஃப். இது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

ஏப்ரல் 15 முதல் 21 வரை ஓடிடியில் வெளியாகும் படங்கள்

ராஜ்பால் யாதவ் மற்றும் கியா மானெக், குரங்கு நாகராஜ் ஆகியோர் இயக்கத்தில் வெளியான படம் காம் சாலு ஹை. இந்த படம் ஏப்ரல் 19ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

யாமி கௌதம் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்டிகல் 370 திரைப்படம் ஜியோ சினிமாவில் வெளியாகிறது. மேலும் ஜீ5 ஓடிடி தளத்தில் குற்றவியல் நாடகமாக உருவாகியுள்ள சைலன்ஸ் 2 ரிலீஸ் ஆகிறது.

ஜப்பானீஸ் வெப் சீரிஸான கிரிம் வேரியேஷன் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. மேலும் அவர் லிவிங் வேர்ல்ட் என்ற ஆங்கில படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

மேலும் கொரியன் சீரிஸான செஃப் டிடெக்டிவ் 1958 ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது. ஆகையால் இந்த வார விடுமுறையில் ஓடிடி தளத்தில் நிறைய படங்களை பார்த்து கண்டுமகிழலாம்.

Trending News