ஏப்ரலில் வெளியாகும் 4 படங்கள்.. விடாமுயற்சியில் விட்டதை பிடிக்கும் அஜித்

April Month Release Movies : கடந்த மார்ச் மாதம் பெரிதும் எதிர்பார்த்த படம் விக்ரமின் வீரதீர சூரன் படம் தான். இப்ப்படம் திரையரங்குகளில் வெளியாவதே மிகப்பெரிய சிக்கலாக இருந்தது.

ஆனால் படம் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. மற்றபடி மார்ச் மாதத்தில் சொல்லிக் கொள்ளும்படி வேறு எந்த படங்களும் அமையவில்லை. ஏப்ரல் மாதத்தில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நான்கு படங்கள் வெளியாக இருக்கிறது.

விடாமுயற்சி படம் அஜித்துக்கு வெற்றி கொடுக்காமல் போய்விட்டது. அடுத்ததாக ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருக்கிறது

ஏப்ரல் மாதம் வெளியாகும் 4 படங்கள்

சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் மீண்டும் இவர்களது கூட்டணியில் உருவாகி இருக்கிறது கேங்கர்ஸ். தொடர்ந்து வெற்றி கொடுக்கும் சுந்தர்சிக்கு இந்த படமும் ஹிட் கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அடுத்ததாக சமீபகாலமாக நயன்தாராவுக்கு தமிழில் அதிகம் படம் வெளியாகவில்லை. இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 4 ஆம் தேதி நயன்தாராவின் டெஸ்ட் படம் வெளியாகிறது.

இந்த படத்தில் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் போன்றோர் நடித்திருக்கின்றனர். டெஸ்ட் படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஒடிடியில் வெளியாகிறது.

ஏப்ரல் 18ஆம் தேதி விஜய்யின் நடிப்பில் வெளியான சச்சின் படம் ரீ ரிலீஸ் ஆகிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள்.