வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சினிமாவே வேண்டாம், வெறுத்துப் போயிட்டேன்.. ஏஆர் முருகதாஸுக்கு அப்படி என்னதான் ஆச்சு

ஏ ஆர் முருகதாஸ் என்ற ஒரு வார்த்தை தமிழ் சினிமாவிலும் தமிழ் மக்களுக்கும் நல்ல படங்களை தரும் இயக்குனர் என்ற பெயர் கொண்டவர். தீனா, ரமணா, கத்தி மற்றும் துப்பாக்கி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார். ஏ ஆர் முருகதாஸ் படங்கள் என்றால் அது பிளாக்பஸ்டர் தான் எனக் கூறுமளவிற்கு அவருடைய வளர்ச்சி இருந்தது.

அந்த அளவிற்கு முருகதாஸ் பிரமாண்டம் பிரமிப்பு வித்தியாசம் என்று தன் படங்களில் அற்புதமாக கதைக்களத்தை அமைத்து மக்களிடம் படத்தைக் கொண்டு போய் சேர்ப்பார். இதில் முக்கியமாக விஜய் என்றால் முருகதாஸ், முருகதாஸ் என்றால் விஜய் எனக் கூறுமளவிற்கு இவர்களது கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. ஆனால் தற்போது முருகதாஸின் நிலைமை யாரும் கண்டுகொள்ளாத படி அமைந்துள்ளது.

இதற்கு காரணம் தனதுகதைகளை மட்டுமே நம்பி எடுத்தார் அந்த படங்கள் ஹிட்டடித்தன. ஆனால் சமீப காலமாக தனக்கு கிடைத்த கதாநாயகர்களை வைத்து படம் எடுத்து அவர்களுக்கு தகுந்தாற்போல் கதைகளில் மாற்றங்கள் செய்வதால் இப்பொழுது அவர் ஏமாற்றம் அடைந்தார்.

எடுத்துக்காட்டாக ஸ்பைடர், தர்பார் போன்ற படங்களில் தோல்வி அவரின் பழைய வெற்றியை காணாமல் செய்துவிட்டது. அதை தொடர்ந்து அவருக்கு அவரால் புகழ்பெற்ற நடிகர்கள் இன்று படம் இயக்க வாய்ப்பு தர மறுக்கிறார்கள். அந்த அளவுக்கு அவரை ஒதுக்கிவிட்டனர். இந்த நிலையில் இயக்குனர் சங்க தேர்தல் எழுத்தாளர் சங்கத்திடம் சொல்லி சொல்லி பல விஷயம் நடந்தது அதில் இவர் பாக்யராஜ்க்கு எதிரணிக்கு ஆதரவை தெரிவித்தார்.

இந்த நிலையில் இவர் எதிர்பார்த்த வெற்றி ஆர்கே செல்வமணி கிடைத்தது. இந்தநிலையில் ஆர்கே செல்வமணி இடம் வாழ்த்து தெரிவிக்க தொலைபேசியில் பேசும்போது தனது ஆதங்கத்தை தன்னை மறந்து எனக்கு இந்த சினிமாவில் இருக்க பிடிக்கவில்லை நான் இந்த இயக்குனர் தொழிலை விட்டுவிட்டு சினிமாவை விட்டு செல்ல போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆர்கே செல்வமணி இது சினிமா வெற்றி தோல்வி மாறி மாறி வரத்தான் செய்யும் இதற்காக சினிமாவை விட்டு சென்றாள் நாங்கள் எல்லாம் இந்த சினிமாவில் இருந்திருக்க முடியாது. அதனால் அதனை மறந்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து உங்களது பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் மக்கள் கொடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், இது பற்றி பேச வேண்டும் என்று முடித்துள்ளார்.

இதனால் அடுத்த வெற்றியை தமிழக மக்களிடம் கொடுக்க முருகதாஸ் தயார் பண்ணிக் கொண்டிருக்கிறார் மக்களும் ரசிகர்களும் அதற்காக காத்திருப்போம். நடிகர் விக்ரமுடன் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் அடுத்தப் பட வாய்ப்பு கிடைத்துள்ளது, இதில் வெற்றி பெற்றால் மட்டுமே சினிமாவில் நிரந்தரமாக இருக்க முடியும்.

Trending News