வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

5 ஹீரோக்களுக்கு மறக்க முடியாத ஹிட் கொடுத்த ஏஆர் முருகதாஸ்.. டம்மி இல்லன்னு நிரூபிச்ச கேப்டனின் படம்

AR Murugadoss gave an unforgettable hit to 5 heroes: தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களை இயக்கிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ், இப்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். இவர் 5 ஹீரோக்களுக்கு மறக்க முடியாத ஹிட் கொடுத்தவர். அதிலும் கேப்டன் விஜயகாந்த் நடித்த படத்தின் மூலம் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து, தன்னை யார் என நிரூபித்திருக்கிறார்.

அஜித்: ஏஆர் முருகதாஸ் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான முதல் படமே அஜித்தை வைத்து எடுத்த தீனா படத்தின் மூலம் தான். 2001ம் ஆண்டில் வெளியான இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்ததுடன் வசூலிலும் சக்கை போடு போட்டது. இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் ரேஞ்ச் எங்கேயோ போய்விட்டது.

விஜய்: ஏஆர் முருகதாஸ் அவருடைய உதவி இயக்குனரின் கதையை வைத்து எடுத்த படம் தான் துப்பாக்கி. தளபதி விஜய்- காஜல் அகர்வால் இணைந்து நடித்த இந்த படம், ஒரு அழகான ராணுவ வீரரின் வாழ்க்கையையும், ராணுவ வீரராக இருப்பவர்கள் வேலை செய்கிற இடத்தில் மட்டுமல்லாமல் 24 மணி நேரமும் நாட்டுடைய நலனுக்காகவே பாடுபடுகிறார்கள் என்பதை இந்த படத்துல ஏஆர் முருகதாஸ் சிறப்பாக காட்டினார்.

சூர்யா: ஏற்கனவே அமீர்கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படத்தை அப்படியே தமிழில் சூர்யாவை வைத்து ஏஆர் முருகதாஸ் இயக்கிய படம் தான் கஜினி. இதுல சூர்யாவின் அல்டிமேட் நடிப்பை ஏஆர் முருகதாஸ் வெளிக் கொண்டு வந்தார். இந்த படத்துக்கு அப்புறம் சூர்யாவின் மார்க்கெட் டாப் கீரில் எகிறியது.

Also Read: 22 வருடங்களாக விஜய்க்கு கிடைக்காத வாய்ப்பு.. சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்த அஜித்

ரஜினி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் கெட்டப்பில் மாஸாக நடித்திருந்த தர்பார் படத்தை ஏஆர் முருகதாஸ் தான் திரைக்கதை எழுதி இயக்கினார். இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். மும்பை போலீஸ் கமிஷனர் ஆதித்யா அருணாச்சல ஐபிஎஸ் ஆக காக்கி சட்டையில பார்த்ததுமே சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இந்தப் படத்தை ஆரவாரம் செய்து விட்டனர். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் போலீஸ் ஆக மறுபடியும் சூப்பர் ஸ்டாரை திரையில காண்பித்து ஏஆர் முருகதாஸ் இந்த படத்துல கலக்கிவிட்டார். 

விஜயகாந்த்: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த படம் தான் ரமணா. இந்த படம் நடிகர் விஜயகாந்துக்கு மிக முக்கிய படமாக அமைந்ததுடன், இந்த படத்தின் மூலம் அவர் சொன்ன புரட்சிகரமான கருத்துக்கள் பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா படத்திற்கு தமிழில் கிடைத்த அமோக வரவேற்பை பார்த்த பிறகு, தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.

ரமணா படம் இன்றும் கேப்டனின் திரை வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்ல இந்த படத்தின் மூலம் தான் ஏஆர் முருகதாஸ் தன்னை யார் என நிரூபித்து, ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியப்படுத்தினார்.

Also Read: கேப்டன் அந்த இடத்துல இருந்தா ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாரு.. விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட மீசை வில்லன்

- Advertisement -

Trending News