திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கடைசி 3 படத்தின் தோல்வியை பகிரங்கமாக போட்டுடைத்த ஏ ஆர் முருகதாஸ்.. அதிர்ச்சியில் திரையுலகம்

முன்னணி ஹீரோக்களை வைத்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் கடந்த சில வருடங்களாகவே எந்த படத்தையும் இயக்கவில்லை. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என ஒரு ரவுண்டு வந்த இவர் திடீரென டாப் ஹீரோக்களால் ஒதுக்கப்பட்டு விட்டார் என்று கூட பேசப்பட்டு வந்தது.

இதற்கு முக்கிய காரணம் கடைசியாக அவர் இயக்கிய திரைப்படங்கள் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை என்பதுதான். இந்த விமர்சனத்திற்கு தற்போது ஏ ஆர் முருகதாஸ் அதிரடியான ஒரு விளக்கத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் தன் தோல்வி படங்களை பகிரங்கமாக ஒப்புக் கொண்டும் இருக்கிறார். அந்த வகையில் இவர் கடைசியாக ஸ்பைடர், சர்க்கார், தர்பார் ஆகிய மூன்று படங்களை இயக்கியிருந்தார்.

Also read: அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாரான லோகேஷ்.. அதிரடியாக கண்டிஷன் போட்ட விஜய்

இந்த மூன்று படங்களும் ஏன் சரியாக போகவில்லை என பத்திரிக்கையாளர் ஒருவர் ஏ ஆர் முருகதாஸிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் சரியாக திட்டமிடாமல் படப்பிடிப்பு நடத்தியது தான் காரணம் என்று தெரிவித்தார். மேலும் ஸ்பைடர் திரைப்படத்தில் மகேஷ் பாபுவை கொஞ்சம் குறைவாக காட்டியது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து தர்பார், சர்க்கார் போன்ற படங்களும் அவசரமாக எடுக்கப்பட்டதும் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என்று விளக்கம் கொடுத்துள்ளார். இதுதான் தற்போது திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் சர்க்கார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட் என்றுதான் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Also read: விஜய்க்காக தன்னோட ஸ்டைலையே மாற்றிய லோகேஷ்.. இதுவரை செய்யாத பெரிய சம்பவமா இருக்குமோ

ஆனால் இயக்குனர் கூறிய இந்த விஷயத்தை பார்த்த பலரும் எது உண்மை என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் தோல்வி படத்தை கூட ஹீரோக்கள் ஒப்புக்கொள்ள முடியாமல் வெற்றி என நம்ப வைக்கிறார்களா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. மேலும் சர்க்கார் பட கதை பிரச்சனை பெரும் புயலையே கிளப்பியது. அது படத்திற்கு சில பின்னடைவுகளையும் ஏற்படுத்தியது.

அதையெல்லாம் சரி செய்யும் வகையில் தான் அப்படம் ஹிட் என்று கூறி ஏமாற்றி இருக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு தற்போது கிளம்பியுள்ளது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் சர்க்கார் மிகப்பெரிய வெற்றி படம் தான் என்று கூறி சோசியல் மீடியாவையே ரணகளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஏ ஆர் முருகதாஸின் இந்த பேட்டி ஒரு பூகம்பத்தையே உருவாக்கி இருக்கிறது.

Also read: முருகதாஸிடம் வாக்கு கொடுத்த பின் கைவிட்ட தளபதி.. அப்படி பேசியதால் சம்பாதித்த மொத்த வெறுப்பு

Trending News