வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிரபல நடிகருடன் கைகோர்க்கும் ஏ ஆர் முருகதாஸ்.. அப்புறம் என்ன அடுத்த பாக்ஸ் ஆபீஸ் இவங்க தான்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். அஜித், விஜய், ரஜினி, சூர்யா என தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு முருகதாஸ் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம்பெற்றார்.

ஏ ஆர் முருகதாஸ் பாலிவுட் படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் தளபதி விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். இதைத்தொடர்ந்து விஜய்யின் 65 வது படத்தை முருகதாஸ் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பும் வெளியானது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இப்படத்திலிருந்து முருகதாஸ் விலகிவிட்டார்.

இதனால் கடந்த இரண்டு வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த முருகதாஸ் தற்போது மீண்டும் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படமும், விக்ரம் வைத்து ஒரு படமும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் விக்ரம் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கயுள்ளார். இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. தமிழ்சினிமாவில் வெளியாகும் மற்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ஏ ஆர் முருகதாஸ் உண்மைச் சம்பவம் அல்லது நாட்டுக்குத் தேவையான சில கருத்துக்களையும் மையமாக வைத்து படங்களை எடுத்து வெற்றிக்கான கூடியவர்.

அவ்வாறு விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திலும் சமூகப் பிரச்சனையை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்தினம் இயக்கத்தில் பொண்ணியின் செல்வன், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது பா ரஞ்சித் இயக்கும் விக்ரம் 61 படத்தில் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தற்போது ஏஆர் முருகதாஸுடன் விக்ரம் இணைய உள்ள செய்தி அவர்களது ரசிகர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News