வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மணிரத்தினத்தை பாலோ செய்த ஏ ஆர் ரகுமான்.. சத்தம் இல்லாமல் நடக்க போகும் சம்பவம்

இசை உலகின் ஜாம்பவானாக இருக்கும் ஏ ஆர் ரகுமான் இப்போது பல திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார். அதிலும் அவர் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போது அதிகமாக இருக்கிறது. அதை தொடர்ந்து அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளிலும் அவர் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

இப்படி பிஸியான வேலையிலும் அவர் ஒரு விஷயத்தை செய்வதற்கு முன் வந்திருக்கிறார். அதாவது ஏ ஆர் ரகுமான் சினிமாவில் இருக்கும் லைட் மேன்களுக்காக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறாராம். ஏனென்றால் திடீரென படப்பிடிப்பில் அவர்களுக்கு ஏதாவது விபத்து போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கான உதவி அவர்களுக்கு கிடைப்பதில்லை. இதைப்பற்றி யோசித்த ஏ ஆர் ரகுமான் தற்போது திடீரென அவர்களுக்கான ஒரு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த இருக்கிறார்.

Also read: மணிரத்தினம் கூப்பிட்டதால் கவர்மெண்ட் வேலையை ரிசைன் செய்த ஹீரோ.. ஜெயித்ததால் மிஞ்சியது கௌரவம்

அதன்படி நேரு ஸ்டேடியத்தில் மார்ச் மாதம் இந்த நிகழ்வு நடக்க இருக்கிறது. அதன் மூலம் வரும் பணத்தை அவர் அப்படியே லைட் மேன்களுக்காக கொடுக்க பிளான் செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இனிவரும் நாட்களிலும் அடுத்தடுத்த இசை நிகழ்ச்சியை நடத்தி சினிமாவில் இருக்கும் அத்தனை தொழிலாளர்களுக்கும் உதவ வேண்டும் என்று அவர் முடிவு செய்திருக்கிறாராம். இந்த விஷயம் தற்போது திரையுலகினரால் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும் தங்களுக்காக இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கும் இசைப்புயலுக்கு சினிமா தொழிலாளர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் கூட இது போன்று கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் செய்ய முன் வருவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்போது பல படங்களின் சூட்டிங் வெளியூரில் தான் நடத்தப்படுகிறது.

Also read: சினிமாவே வெறுத்து ஒதுக்கிய நடிகர்.. மணிரத்தினம் அசிஸ்டன்ட்க்கு ஏற்பட்ட அவல நிலை

அதுவே சென்னையை சுற்றி இருக்கும் பகுதிகளில் நடந்தால் இங்குள்ள தொழிலாளர்களுக்கு வருமானம் கிடைக்கும். ஆனால் அதையெல்லாம் பெரிய நடிகர்கள் யாரும் யோசிப்பது கிடையாது. இது குறித்து சில மாதங்களுக்கு முன்பே திரைப்பட சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் பல டெக்னீசியன்கள் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு உதவ முன் வந்தது நிச்சயம் பாராட்டுக்குரியது.

அந்த வகையில் இதற்கு முன்பே கொரோனா காலகட்டத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மணிரத்தினம் ஏராளமான உதவிகளை செய்து இருக்கிறார். மேலும் திரையுலகில் நிலைமை சீராகி அனைவருக்கும் வேலை கிடைக்கும் வரையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான மளிகை பொருட்களை அவர் மாதம் தோறும் இலவசமாக அனுப்பி வைத்திருக்கிறார். இப்படி மகத்தான ஒரு உதவியை செய்த மணிரத்தினத்தை ஃபாலோ செய்யும் வகையில் ஏ ஆர் ரகுமானும் களத்தில் இறங்கி இருக்கிறார்.

Also read: பொன்னின் செல்வன் 2 ரிலீஸ் தேதியை லாக் செய்த மணிரத்தினம்.. ஜெயிலருக்கு பின் பிரம்மாண்ட வெளியீடு

Trending News