வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இதுல எதுக்கு அரசியலை திணிக்கிறீங்க.. ஏ ஆர் ரகுமானை டென்ஷன் ஆக்கிய பிரபலம்  

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து பிரபலமாக இருப்பவர் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார். இவர் தற்போது படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவரின் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த வகையில் இவர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ஒரு திரைப்படம் முத்து. ரஜினி இரு வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பயங்கர ஹிட் ஆனது.

அதிலும் தில்லானா தில்லானா என்ற பாடல் அந்த சமயத்தில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இந்தப் பாடல் உருவான விதம் பற்றி தற்போது கே எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

அப்போது தில்லானா தில்லானா என்ற டூயட் பாடலுக்கு கவிஞர் வைரமுத்து முதலில் தமிழ்நாட்டு மக்கள் கூட்டம் உன்னோடு தானே, நான் மட்டும் தள்ளி நிற்பேனா என்பது போன்ற வரிகளை அந்த டியூன்க்கு எழுதி இருந்தாராம்.

அதைக்கேட்ட ஏ ஆர் ரகுமான் ஒரு டூயட் பாடலுக்கு எதுக்கு அரசியல் வரிகள் என்று கேட்டுள்ளார். அதற்கு வைரமுத்து இல்லை சூப்பர் ஸ்டாருக்கு இது போன்ற வார்த்தைகள் எல்லாம் ரொம்ப முக்கியம் என்று சொல்லியுள்ளார். இருந்தாலும் ஏ ஆர் ரகுமான் இந்த வார்த்தைகள் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

மேலும் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரும் வேறு ஏதாவது வார்த்தைகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் வைரமுத்து பல யோசனைகளுக்கு பிறகு தில்லானா தில்லானா என்ற வார்த்தைகளை போட்டு அந்த பாடலை எழுதியுள்ளார்.

அந்த வரிகள் ஏ ஆர் ரஹ்மானுக்கு ரொம்பவும் பிடித்து போய்விட அதையே பாடலாக உருவாக்கி விட்டார் என்று கே எஸ் ரவிக்குமார் அந்த பாடல் ரெக்கார்டிங்கின் போது நடந்த சுவாரஸ்யமான இந்த சம்பவத்தை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

Trending News