செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

முதல் படத்திற்கு ஏஆர் ரகுமான் வாங்கிய சம்பளம்.. ரகசியத்தை வெளியிட்ட பிரபலம்

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் மாதவனுக்கு தந்தையாக நடித்து, நடிகராகவும் அதன்பிறகு தயாரிப்பாளராகவும் பிரபலமானவர் நடிகர் பிரமிட் நடராஜன். இவர் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் வங்கிய முதல் சம்பளத்தை பற்றி தெரிவித்திருக்கிறார்.

தற்போது இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஏஆர் ரகுமான் முதல் முதலாக இசையமைத்த படம் மணிரத்தினத்தின் ரோஜா. இந்தப் படத்திற்கு வைரமுத்து வரிகளில் ஏஆர் ரகுமான் மெட்டுப் போட்ட ஆறு பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. அப்போது ஏஆர் ரகுமானின் பெயர் திலீப்.

எனவே திலீப் ஆக ஏஆர் ரகுமான் ரோஜா படத்திற்காக வாங்கிய சம்பளம் வெறும் ஐந்தாயிரம் ரூபாயாம். ரோஜா படத்தில் ஏஆர் ரகுமான் இசை அமைத்தது மட்டுமல்லாமல் இதில் இடம்பெற்றிருக்கும் ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடலையும் பாடியிருப்பார்.

அரவிந்த்சாமி, மதுபாலா நடித்த ரோஜா படத்தை பாலச்சந்தர் தயாரித்திருப்பார். இந்த படத்திற்கான சம்பளத்தை அப்போது கவிதாலயா ஆபீஸில் இருந்த பிரமிட் நடராஜன் தான் ஏஆர் ரகுமானுக்கு ஐந்தாயிரம் ரூபாய் காசோலையை வழங்கியிருக்கிறார்.

இவ்வாறு ஐந்தாயிரம் ரூபாயிலிருந்து தனது இசை பயணத்தை துவங்கிய ஏஆர் ரகுமான் தற்போது இந்திய சினிமாவில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் இந்த தகவலை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வளவு எளிமையாக இருந்து தற்போது பல கோடிகளை சம்பாதித்து வருகிறார் இந்த ஆஸ்கர் நாயகன். எளிமைக்கு உதாரணமாக இருந்து வரும் ஆஸ்கர் நாயகனை இளைஞர்கள் எடுத்துக்காட்டாக கொண்டுள்ளனர்.

Trending News