ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இயக்குனர்களுக்கு சவால் விட்ட பார்த்திபன்.. அவருக்கு முதல்ல ஒரு ஆஸ்கர் கொடுங்கப்பா

பார்த்திபன் இயக்கத்தில் தயாரித்து, நடித்து வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். இதனால் இப்படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி பிரிவில் தேசிய விருதை பார்த்திபன் பெற்றார். இந்நிலையில் பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகியிருந்தது. இதனை பிரபல இயக்குனர் மணிரத்தினம் வெளியிட்டார். அதில் பார்த்திபனின் வித்தியாசமான புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

காளி ஒற்றை கையில் துப்பாக்கி ஏந்தி இருக்க அதன் முன்னால் முட்டி போட்டு பார்த்திபன் ஆக்ரோஷமாக கத்துவது போல் ஒரு போஸ்டர் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து மற்றொரு போஸ்டரில் இருண்ட பங்களாவின் முன் கையில் டார்ச் லைட் உடன் பார்த்திபன் இருப்பது போல் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இப்படத்திற்கு பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை சொல்லி வருகின்றனர். இரவின் நிழல் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். முதல் முறையாக பார்த்திபன், ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் படம் வெளியாக உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது.

இப்படத்தில் அனுபவத்தை பற்றியும், பார்த்திபன் பற்றியும் ஏ ஆர் ரகுமான் பெருமையாக பேசி உள்ளார். அதேபோல் இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இரவின் நிழல் படத்தைப்பற்றி நல்ல விமர்சனங்களை கொடுத்துள்ளனர். இப்படம் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்த நிலையில் பல பிரபலங்களும் படத்தை பாராட்டி வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இரவின் நிழல் படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

Trending News