1991 ஆம் ஆண்டு வரை இந்திய திரை உலகில் வெளியாகும் பாடல்களின் இசைகள் மிக சாதாரணமாகவே இருக்கும். ஆனால் ஏஆர் ரகுமானின் வருகைக்குப் பிறகுதான் இசை உலகில் மாபெரும் புதுமை ஏற்பட்டது. ஏனென்றால் ஏஆர் ரகுமானின் முதல் முதலாக இசையமைத்த ரோஜா படத்தில் இடம்பெற்ற பாடல்களையும் அதே வருடம் வெளியான மற்ற பாடல்களையும் ஒப்பிட்டு பார்த்தால் அது கண்கூடாக தெரியும்.
அந்த அளவிற்கு இசையில் மாபெரும் வித்தியாசம் காட்டினார். அதிலும் ரோஜா படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘காதல் ரோஜாவே’ என்ற பாடல் இந்திய திரையுலகமே கோலிவுட் பக்கம் திரும்பியது. இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் கிடைத்தது.
Also Read: ஏஆர் ரகுமானை அடிபணிய வைக்கத் துடிக்கும் சினிமா.. இது என்னடா தமிழனுக்கு வந்த சோதனை
30 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த பாடல் இன்றும் ரசிகர்களின் இதயத்தில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. இப்படி பிரெஷான சவுண்டில் பாடல்களை இசையமைக்கும் ஏஆர் ரகுமான் வரலாற்றிலேயே முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.
இது மட்டுமல்ல உயரிய விருதான ஆஸ்கார் விருது, கொல்கன் க்ளோப் விருது போன்ற தேசிய விருதுகளை எல்லாம் வாங்கி குவித்திருக்கிறார். ஏஆர் ரகுமான் இசையில் ஏதோ மேஜிக் இருக்கிறது என்பதை அறிந்த பாலிவுட் அவரை தமிழகத்திற்கு வரவிடாமலேயே பிஸியாக்கி வைத்திருக்கிறது.
இருப்பினும் தமிழ் ரசிகர்களின் தாகத்தை போக்க வேண்டும் என்றே கோலிவுட்டில் அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட் ஆகிக்கொண்டிருக்கிறார். ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமானின் இசையில் 2023 ஆம் ஆண்டு 6 படங்கள் அடுத்தடுத்து வெளி வருகிறது.
அதிலும் சிவகார்த்திகேயனின் அயலான், சிம்புவின் பத்து தல, பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்களுக்கு எல்லாம் இசையமைத்திருக்கும் ஏ ஆர் ரகுமானின் பாடல்களை கேட்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.