Aranmanai 4: இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்தே தமிழில் சொல்லிக் கொள்ளும் படியான ஹிட் படங்கள் எதுவும் வரவில்லை. கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு அந்த குறையை சுந்தர் சி தீர்த்து வைத்துள்ளார்.
அரண்மனை 4 கடந்த 3ம் தேதி வெளியானது. ஏற்கனவே இதன் ட்ரெய்லர் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்,
சுந்தர் C
தமன்னா
ராஷி கண்ணா
யோகி பாபு
கோவை சரளா
கருடா ராம்
சந்தோஷ் பிரதீப்
ஹீரோயின்களும் கண்கவரும் உடையில் வந்து பிரமோஷன் செய்தனர். அவர்களுடன் சுந்தர் சி-யும் பல சுவாரஸ்யமான விஷயங்களை மீடியாவில் பகிர்ந்து கொண்டார். இப்படியாக ஒரு ஆர்வத்தை உருவாக்கியிருந்த இப்படம் முதல் காட்சியிலேயே ஸ்கோர் செய்திருந்தது. அதை தொடர்ந்து படத்திற்கான விமர்சனங்களும் பாசிட்டிவாக இருந்தது.
அரண்மனை 4 வசூல்
மேலும் விடுமுறை நாள் என்பதாலும் குடும்பத்தோடு பார்க்கும் படியாக படம் இருந்ததாலும் கூட்டம் தியேட்டரில் அலைமோதியது. இதுவே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
அந்த வகையில் தற்போது பட குழு அரண்மனை 4 பாக்ஸ் ஆபீஸ் வசூல் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி தற்போது வரை இப்படம் 100 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமின்றி இந்த வருடத்தின் முதல் பிளாக் பாஸ்டர் ஹிட் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது. இதனால் சந்தோஷத்தில் இருக்கும் சுந்தர் சி அடுத்த பாகத்தை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ரிலீஸ் முதல் இப்ப வரை போராடி வசூல் செய்த அரண்மனை 4
- ரெண்டே நாளில் 50 கோடி கிளப்பில் இணையுமா அரண்மனை 4.?
- 7 நாட்களில் செய்த கலெக்சன் ரிப்போர்ட்
- 2 வாரங்கள் ஆகியும் அள்ள அள்ள குறையாத அரண்மனை 4 வசூல்
- அரண்மனை 5 எடுக்க போறேன், வைரல் மீம்ஸ்