ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Aranmanai 4 : ரெண்டே நாளில் 50 கோடி கிளப்பில் இணையுமா அரண்மனை 4.? 5 நாட்களில் செய்த வசூல் விவரம்

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த சுந்தர் சி நமக்கு அரண்மனை தான் கை கொடுக்கும் என்று பார்ட் 4 படத்தை எடுக்க ஆரம்பித்தார். அவர் நினைத்தது போலவே இப்போது இந்தப் படத்தால் கல்லாப்பெட்டி நிரம்பி வருகிறது.

அதிலும் படத்தின் முடிவில் தமன்னா மற்றும் ராசி கன்னா போடும் கூத்தாட்ட பாடலுக்கு தியேட்டரை குதூகலமாகிறது. அரண்மனையில் நான்கு பார்ட்டுகளில் இந்த படம் தான் அதிக வசூலை பெற்று வருகிறது. அவ்வாறு ஐந்து நாட்கள் முடிவில் அரண்மனை 4 படத்தின் வசூலை பார்க்கலாம். ‌

அரண்மனை படம் முதல் நாளில் 4. 65 கோடி வசூல் இரண்டாம் நாள் 6.65 மற்றும் 7ஆம் நாள் 8.85 கோடி வசூல் செய்திருந்தது. மேலும் திங்கட்கிழமை நான்காவது நாள் மொத்தமாக 3.65 கோடி வசூல் செய்திருந்தது. நேற்றைய தினம் ஐந்தாவது நாளில் 3.4 கோடி வசூல் செய்திருக்கிறது.

அரண்மனை 4 ஐந்தாவது நாள் வசூல்

இதுவரை அரண்மனை படம் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 26.2 கோடி வசூல் செய்து இருக்கிறது. உலகம் முழுவதும் 34.15 கோடி வசூல் செய்திருக்கிறது. மேலும் அரண்மனை 4 படம் 50 கோடி கிளப்பில் இணையுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துள்ளது.

ஏனென்றால் வரும் நாட்களில் வசூல் குறைந்து வருகிறது. அதோடு வருகின்ற வெள்ளிக்கிழமை மே 10ஆம் தேதி சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு மற்றும் கவினின் ஸ்டார் படங்கள் வெளியாகிறது. இந்த இரண்டு படத்திற்குமே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஆகையால் அரண்மனை 4 படத்திற்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் திரையரங்குகள் குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த படம் 50 கோடி வசூலில் இணைவது கடினம் தான் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் எதிர்பார்த்ததை விட அதிகமானதாக தான் அரண்மனை 4 வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News