ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அச்சச்சோன்னு பிபி-யை எகிற வைத்த தமன்னா, ராஷி கண்ணா.. அரண்மனை 4 ரிலீஸ் எப்ப தெரியுமா.?

Aranmanai 4: சம்மர் வந்துவிட்டாலே புது படங்கள் வரிசை கட்டும். தற்போது தேர்தல் நேரம் என்பதால் அது முடிந்தவுடன் பிரம்மாண்ட படங்கள் அனைத்தும் ரிலீஸ் ஆவதற்கு காத்துக் கொண்டிருக்கிறது.

அதன்படி சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடித்துள்ள அரண்மனை 4 படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. அச்சச்சோ என தொடங்கும் இப்பாடலில் ஹீரோயின்கள் இருவரும் போட்டி போட்டு கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே இப்படத்தின் ஸ்டில்கள் பிரத்தியேகமாக வெளியாகி இருந்தது. அதிலேயே ரசிகர்கள் தலை சுற்றி போனார்கள். அதைத்தொடர்ந்து வெளியாகி உள்ள இந்த பாடல் பிபி-யை ஏற்றும் வகையில் இருக்கிறது.

குத்தாட்டம் போட்ட தமன்னா, ராஷி கண்ணா

அந்த அளவுக்கு படு கிளாமராக அவர்கள் குத்தாட்டம் போட்டுள்ளனர். மேலும் இப்பாடலின் இறுதியில் படம் ஏப்ரல் 26 வெளியாகும் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி இந்த ஒரு பாடலுக்காகவே தியேட்டரில் கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல் குஷ்பூ, சிம்ரன் இருவரும் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பாடலுக்கு நடனம் ஆகியுள்ளனர்.

மேலும் ஹிப் ஹாப் ஆதியின் இசையும் தற்போது ரசிகர்களை வைப் செய்ய வைத்துள்ளது. ஆக மொத்தம் மூன்று பாகங்கள் வந்திருந்தாலும் தற்போது நான்காம் பாகமும் ஒரு எதிர்பார்ப்பை முன் வைத்திருக்கிறார்.

Trending News