Aravind Swamy : தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற கேரக்டர் மூலம் தரமான கம்பேக் கொடுத்தவர் அரவிந்த்சாமி. இப்போது செப்டம்பர் 27 திரைக்கு வர உள்ள மெய்யழகன் படத்தில் நடித்திருக்கிறார். 96 போன்ற அற்புதமான படத்தை கொடுத்த பிரேம்குமார் இயக்கியுள்ளார்.
இதில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் அவருக்கு இணையான கதாபாத்திரம் அரவிந்த்சாமிக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தான் இப்போது அரவிந்த்சாமி கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் பேசிய வீடியோ ஒன்று பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
அதில் தொகுப்பாளர் கோபிநாத், ரசிகர் மன்றம் குறித்த கேள்வியை அரவிந்த்சாமி இடம் கேட்டார். எனக்கு ரசிகர் மன்றம் வைத்தால் அதனால் யாருக்கு என்ன பயன், நாளைக்கு நான் சினிமாவில் இல்லாமலும் போகலாம். அப்போது ரசிகர்கள் என்ன செய்வார்கள்.
ரசிகர் மன்றம் குறித்து பேசிய அரவிந்த்சாமி
உங்களது பையன் என்னுடைய ரசிகர் மன்றத்தில் சேர போகிறான் என்று உங்களிடம் சொன்னால் என்ன சொல்வீர்கள் என்ற கோபிநாத் இடம் அரவிந்த்சாமி கேள்வி கேட்டார். படத்த பாக்குறியா அதோட நிறுத்திக்கோ, ரசிகர் மன்றத்தில் சேரக்கூடாது என்று சொல்வேன் என கோபிநாத் சொன்னார்.
அதேதான் நானும் என் பையன் கிட்ட சொல்லுவேன். என் பையனுக்கு ஒரு அட்வைஸ், ஊரான் பையனுக்கு ஒரு அட்வைஸ் எப்படி சொல்ல முடியும் என்று அரவிந்த்சாமி ஒரே போடாக போட்டுள்ளார். அஜித் இதே போன்று தான் தனது ரசிகர் கூட்டத்தை சில வருடங்களுக்கு முன்பு கலைத்தார்.
உங்களுடைய வேலையை பாருங்கள் என்று தனது ரசிகர்களுக்கு அட்வைஸும் கொடுத்திருந்தார். ரஜினி, விஜய் நடிகர்கள் போன்ற இப்போதும் ரசிகர் மன்றத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் படங்கள் வெளியாகும் போது ஆர்ப்பரிக்கின்றனர்.
ரசிகர் மன்றம் இருந்தாலும் ஒரு அளவுடன் இருந்தால் நல்லது. இப்போது அரவிந்த்சாமியின் இந்த பேட்டி ரஜினி மற்றும் விஜய் போன்ற நடிகர்க்கு மண்டையில் கொட்டு வைக்கும்படி இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
என்றும் இளமையுடன் அரவிந்த்சாமி
- அரவிந்த்சாமி, கார்த்தியின் மெய்யழகன் டீசர் எப்படி இருக்கு.?
- 2ஆம் இன்னிங்ஸில் ஓய்ந்து போன அரவிந்த்சாமி
- கார்த்தியுடன் கிராமத்து கெட்டப்பில் அரவிந்த்சாமி