வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

லைவ்வில் சாராவை திருமணம் செய்து கொள்ள கேட்ட ரசிகர்.. பக்காவாக பதிலடி கொடுத்த அர்ச்சனா

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. இவர் தொகுத்து வழங்கிய காமெடி டைம் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைந்தார்.

இந்நிகழ்ச்சி மூலம் அர்ச்சனாவுக்கு ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியது. மேலும் அர்ச்சனா விஜய் டிவிக்கு வந்ததால் தான் வேலை பார்த்த தொலைக்காட்சிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அர்ச்சனா தன் மகள் சாராவுடன் இணைந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இதனால் சாராவும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகியுள்ளார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் அர்ச்சனா மற்றும் சாரா இருவரும் நடித்திருந்தனர். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் பல பிரபலங்களும் யூடியூப் சேனல் தொடங்கினார்.

அப்போது அர்ச்சனாவும் ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில் பாத்ரூம் டூர் போட்டு இருந்தார். இதற்கு ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வந்தது. மேலும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இந்த வீடியோவை பலவிதமாக ட்ரோல் செய்திருந்தார்கள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் யூடியூபில் லைவ் வந்துள்ளார்கள்.

அப்போது சாராவை பற்றி நிறைய கேள்விகள் வந்தது. அதில் ஒரு ரசிகர் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சாராவிடம் கேட்டுள்ளார். அதற்கு அர்ச்சனா பதிலளித்துள்ளார். அதில் 15 வருஷம் கழிச்சி உங்க அம்மா, அப்பாவை அழைத்து வந்து பேசு என அர்ச்சனா பதிலடி கொடுத்துள்ளார்.

அர்ச்சனா பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சாராவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். மேலும், திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இன்னும் சில வருடங்கள் போனால் சாரா முன்னணி நடிகையாக வலம் வரவும் அதிக வாய்ப்பு உள்ளது.

 

Trending News