வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சித்தரிடம் டீல் பேசி திருடும் அர்ச்சனா.. முட்டாள்தனமான வில்லி நீங்கதான்

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் வில்லி அர்ச்சனா செய்யும் அட்டூழியம் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் அர்ச்சனா தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கவேண்டும் என்பதற்காக சித்தர் ஒருவரை சென்று பார்க்கிறார்.

அங்கு சித்தரிடம் அர்ச்சனா மூன்று வருடம் கழித்து கர்ப்பம் தரித்திருக்கும் தனக்கு, பெண் குழந்தை வேண்டாம் என்றும் ஆண் குழந்தை மட்டுமே வேண்டும் என்று வேண்டுதல் வைக்கிறார். அதன் பிறகு சித்தருக்கு வாழைப்பழமும் சுருட்டு பீடியும் தட்சணையாக தருகிறேன் என அவரிடம் கொடுக்கிறார்.

‘இதெல்லாம் எனக்கு வேண்டாம் போய் பத்தாயிரம் ரூபாய் பணம் கொண்டு வா’ என்று சித்தர் அர்ச்சனாவிடம் டீல் பேசுகிறார். அர்ச்சனாவும் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் தனக்கு ஆண் குழந்தை பிறந்து விடும் என்ற ஆசையில் வீட்டிற்கு சென்று பத்தாயிரம் ரூபாயை ஏற்பாடு செய்ய கிளம்புகிறாள்.

இவ்வாறு அர்ச்சனா ராஜா ராணி2 சீரியலில் மூளை இல்லாத முட்டாள் வில்லியாக நடந்து கொள்வதால் சோசியல் மீடியாவில் சின்னத்திரை ரசிகர்களால் கழுவி கழுவி ஊற்றப்படுகிறாள்.

அதுமட்டுமின்றி மாமியாரிடமும் ஐபிஎஸ் அதிகாரியாக மாறத் துடிக்கும் சந்தியாவிடமும் அர்ச்சனா செய்யும் சேட்டைகளும், அதன் பிறகு அவர்களை சமாளிக்கும் விதமும் தான் இந்த சீரியலில் பிளஸ் பாயிண்ட்.

இவ்வாறு இருக்க இனி வரும் நாட்களில் அர்ச்சனாவிற்கு பெண் குழந்தை பிறந்து, அவர் நினைத்தது இதிலும் நடக்காமல் அவதிப்பட போகிறார். இருப்பினும் அர்ச்சனா ராஜாராணி 2 சீரியலின் விறுவிறுப்பை கூட்டும் நபராகவே அவருடைய கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

Trending News