வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கைத்தட்டலால் அர்ச்சனாவுக்கு ஏறிய தலைக்கனம்.. கடைசி வரை பதட்டத்திலேயே வைத்திருக்கும் பிக்பாஸ்

Archanna-Biggboss 7: இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பிக்பாஸ் 7 கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. ஆனாலும் ஆண்டவர் இதை எப்படியோ தாங்கிப் பிடித்து ஃபைனல்ஸ் வரை கொண்டு வந்து விட்டார். அதன்படி நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் வீட்டை விட்டு விசித்ரா வெளியேறினார்.

இது நியாயம் இல்லை என்றாலும் தற்போது டைட்டில் வின்னர் யார் என மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர். அதன்படி அர்ச்சனாவுக்கு தான் தற்போது அதிக ஆதரவு இருக்கிறது. அதை பூர்ணிமாவும் மேடையில் போட்டு உடைத்தார்.

அந்த தைரியத்தில் தற்போது அர்ச்சனா ஓவர் ஆட்டம் ஆடுவது போல் தெரிகிறது. அது தொடர்பான ப்ரோமோ தான் தற்போது வெளியாகி உள்ளது. அதில் பிக்பாஸ் ஒவ்வொருவரும் தங்களுடைய கேம் மற்றவர்களை விட எந்த வகையில் சிறந்தது என கூற வேண்டும் என்ற டாஸ்க்கை கொடுக்கிறார்.

Also read: பிரதீப் ரெட் கார்ட் பற்றி கேட்கப்பட்ட கேள்வி.. வாயை கொடுத்து மாட்டி கொண்ட பூர்ணிமா

அதில் அர்ச்சனா பேசும் பொழுது நான் இப்படிப்பட்ட ஒரு ஆளான்னு நீங்க பேசுறத பாத்தா எனக்கு தோணுது என சொல்கிறார். உடனே மற்றவர்கள் ஏதோ பேச வரும் பொழுது, நான் பேசும்போது யாரும் குறுக்க பேச கூடாது என காதை மூடிக்கொண்டு ஓவர் ஆட்டிட்யூட் காட்டுகிறார்.

இதுதான் அர்ச்சனாவின் உண்மை முகம். தன்னை பற்றி வரும் விமர்சனங்களை இவரால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே மாதிரி பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் வேலை வாங்கி குளிர் காயும் சோம்பேறி குழந்தையும் கூட. ஆனால் அதைப்பற்றி யாராவது சொல்லிவிட்டால் உடனே அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்.

Also read: சேர்க்கை சரியில்ல, ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்.. 95 நாள் தாக்கு பிடித்த விசித்ராவின் மொத்த சம்பளம் இதுதான்

அதைத்தான் தற்போது பிக் பாஸ் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார். கடந்த வாரம் பி.ஆர் டீம் பற்றி போட்டுக் கொடுத்த அவர் இந்த வாரமும் டிவிஸ்ட் வைத்திருக்கிறார். இப்படி கடைசி நேரம் வரை பதட்டத்திலேயே வைத்திருக்கும் விஜய் டிவி மாயாவை காப்பாற்றுவதற்காக தான் இதையெல்லாம் செய்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

 

Trending News