விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 தொடர்கள் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அர்ச்சனா சாமி நகைகளை திருடி சாணியில் மறைத்து வைத்துள்ளார். காலையில் இதை அப்படியே அம்மா வீட்டுக்கு கொடுத்து விடலாம் என்ற திட்டத்தை போட்டிருந்தார் அர்ச்சனா.
மறுநாள் சந்தியா கோயிலில் நடந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது கண்ணம்மா சந்தியாவை சமாதனப்படுத்தி குழந்தைகளை குளிக்க வைக்க வெண்ணீர் வேண்டும் எனக் கேட்கிறார். அப்போது சிலிண்டர் தீர்ந்து விட்டதால் அடுப்பில் வைக்கலாம் என கண்ணம்மா ஐடியா கொடுக்கிறார்.
இதனால் மயிலு விறகு மற்றும் அர்ச்சனா தட்டி வைத்திருந்த வறட்டி ஆகியவற்றை எடுத்து வருகிறார். அப்போது எதேச்சையாக கண்ணம்மா அதில் நகை இருப்பதை பார்க்கிறார். மொத்தமாக கோயில் நகை அனைத்தும் இந்த வரட்டியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற கேவலமான செயலை அர்ச்சனா தான் செய்திருப்பார் என சந்தியா கூறுகிறார்.
இந்த விஷயத்தை அர்ச்சனாவிடம் இருந்த அனைவரும் மறைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் அர்ச்சனா வரட்டியை பார்ப்பதற்கு வரும்போது அங்கு வரட்டியை காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைகிறார். பிறகு மயிலை கூப்பிட்டு இங்க இருந்த வரட்டிகள் எங்கே என அர்ச்சனா கேட்கிறார்.
அதற்கு மயில் அதையெல்லாம் எரிச்சிடோம் என கூறுகிறார். உடனே அதிர்ச்சி அடைந்த அர்ச்சனா ஒரு கோடி நகை எல்லாம் சாம்பலா போச்சு என புலம்பி தவிக்கிறார். அப்போது செந்தில், என்கிட்ட விஷயத்தை சொல்லாமல் மறைச்சிட்ட அர்ச்சனா என கேட்கிறார்.
உடனே விஷயம் செந்திலுக்கு தெரிந்து விட்டதோ என பயப்படுகிறார் அர்ச்சனா. ஆனால் செந்தில் சாம்பல் இல்லேன்னா என்ன உனக்கு ஏதாச்சும் சாப்பிடணும்னு தோணுச்சுன்னா நான் தோப்புக்கு போயி மாங்கா பறிச்சிட்டு வரட்டுமா என கேட்டார். ஒருபுறம் செந்திலுக்கு உண்மை தெரியவில்லை என்ற சந்தோஷத்தில் இருந்தாலும் நகை போய்விட்டதே என்ற துக்கத்திலும் உள்ளார் அர்ச்சனா.