Moondru Mudichu Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், சூர்யா நிதானமே இல்லாமல் எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பதால் மற்றவர்களின் உணர்வை புரிந்து கொள்ளாத அளவிற்கு சில விஷயங்களை செய்து வருகிறார். அதிலும் அம்மாவை காயப்படுத்த வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் போக தயார் என்பதற்கு ஏற்ப சுந்தரவல்லியை பழிவாங்க நந்தினியை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறார்.
இதனால் நந்தினி திருமண வாழ்க்கை நமக்கு வேஸ்ட், அதுவும் சூரியாவுடன் சேர்ந்து வாழ்வது பிரோஜனமில்லை என்ற மனப்பக்குவத்தில் இருக்கிறார். அதனால் மாமனாரிடம் கொடுத்த வாக்கின்படி சூர்யாவை எப்படியாவது குடிப்பழக்கத்தில் இருந்து தடுத்துவிட்டால் மறுபடியும் கிராமத்துக்கு போகலாம் என்று பல வேலைகளை நந்தினி செய்தார். ஆனால் அர்ச்சனா உள்ளே புகுந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டார்.
இருந்தபோதிலும் நந்தினி மற்றும் சூர்யா தனியாக நேரத்தை செலவழித்தால் அவர்களுடைய புரிதல் இன்னும் அதிகரிக்கும் என்பதற்காக மாமனார் யாருக்கும் தெரியாமல் ரிசார்ட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்கே போன பிறகும் இவர்களுடைய புரிதல் கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகி வருகிறது என்பதற்கு ஏற்ப சில காட்சிகள் திருப்திகரமாக இருந்தது.
ஆனால் இந்த விஷயத்தையும் தெரிந்து கொண்ட அர்ச்சனா, நந்தினி வாழ்க்கைக்குள் ஆமை மாதிரி புகுந்து கெடுப்பதற்கு ரிசார்ட்டுக்கு வந்து விட்டார். அர்ச்சனாவின் சூழ்ச்சி எதையும் புரிந்து கொள்ளாத நந்தினி, அர்ச்சனாவை முழுமையாக நம்புகிறார். ஆனால் அர்ச்சனா, சூர்யாவிடம் இருந்து நந்தினியை பிரிக்க வேண்டும் என்பதற்காக நந்தினி குடிக்கும் பாலில் தூக்கு மாத்திரையை கொடுத்து அர்ச்சனா அவருடைய ரூமில் தூங்க வைத்து விட்டார்.
பிறகு யாருக்கும் தெரியாமல் சூர்யா தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்திலேயே அர்ச்சனா போய் தூங்கிக் கொண்டார். இது எதுவும் தெரியாமல் குடித்துவிட்டு போதையில் இருந்த சூர்யாவுக்கு பக்கத்தில் படுத்து இருப்பது நந்தினி தான் என நினைக்கிறார். அதனால் அர்ச்சனா யாருக்கும் தெரியாமல் காலையில் எழுந்து வெளியே போய் விடுகிறார். பிறகு ரூம்குள் வந்த நந்தனிடம் ஏன் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது காலால் உதைத்த என்று சூர்யா கேட்கிறார்.
அதற்கு நந்தினி நான் உங்க பக்கத்தில் படுக்கவில்லை இந்த ரூமுக்கு வரவில்லை. நேற்று அர்ச்சனா அம்மா ரூமில் தான் தூங்கினேன் என்று சொல்கிறார். உடனே சூர்யா நம் பக்கத்தில் படுத்தது யார் என்று யோசிக்கிறார். நிதானம் இல்லாமல் இருக்கும் சூர்யாவிற்கு எந்த ஒரு விஷயமும் புத்திக்கு எட்டாதபடி தான் அமைந்து வருகிறது. இதை அர்ச்சனா அவருக்கு சாதகமாக பயன்படுத்தி நந்தினியை சூர்யாவிடம் இருந்து நிரந்தரமாக பிரிப்பதற்கு சுந்தரவல்லி உடன் கூட்டணி போட்டு விட்டார்.
எப்பொழுது சூர்யா குடிப்பதை விட்டுவிட்டு புத்தியுடன் இருக்கிறாரோ, அப்பொழுதுதான் நந்தினி சூர்யா மனதார ஒன்று சேர்வார்கள். அதுவரை அர்ச்சனா சுந்தரவல்லி தொடர்ந்து நந்தினிக்கு டார்ச்சர் கொடுத்து தான் வருவார்கள்.