செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சூனிய கிழவியின் ஆட்டத்தை புட்டு புட்டு வைத்த அர்ச்சனா.. அரண்டு போன போட்டியாளர்கள்

BB7 Tamil: பிக் பாஸ் ஏழாவது சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக களம் இறங்கி இருக்கும் அர்ச்சனா, மாயா கூட்டணியை சரமாரியாக தாக்கி வருகிறார். கிடைக்கிற இடத்தில் எல்லாம் தன்னால் முடிந்ததை கொளுத்திப்போட்டு பிக் பாஸ் வீட்டையே போர்க்களமாக மாற்றிவிட்டார். அப்படித்தான் நேற்று நடந்த டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார் ஸ்டெல்லா டீச்சர் கேரக்டரிலிருந்த அர்ச்சனா.

ஜோவிகாவின் எலிமினேஷன் பிக் பாஸ் வீட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. அதை கூல் செய்யும் வகையில் அடுத்தடுத்து டாஸ்க் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ். அந்த வகையில் நேற்று கிட்ஸ் சோன் என்னும் டாஸ் கொடுக்கப்பட்டது அதைத் தொடர்ந்து பிக் பாஸ் பல்கலைக்கழகம் என்னும் டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது.

Also Read:அடுத்தடுத்து Bully Gang- ஐ காப்பாற்றி விடும் விஜய் டிவியின் கேவலமான வேலை.. காஜி நிக்சனுக்கு அடித்த லக்

அந்த டாஸ்க்கில் ஒரு சில போட்டியாளர்கள் ஆசிரியர்களாகவும், மற்றவர்கள் மாணவர்களாகவும் கலந்து கொண்டார்கள். நிக்சன் அந்த டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டை பற்றி பாடம் எடுக்கிறேன் என்று தினேஷ் மற்றும் அர்ச்சனாவை பயங்கரமாக வெறுப்பேற்றி விட்டார். அதாவது இதற்கு முன் பிக் பாஸ் வீட்டில் சந்தோஷம் அதிகமாக இருந்ததாகவும், வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்த பிறகுதான் அந்த சந்தோஷம் இல்லை என்றும் சொல்லியிருந்தார்.

அர்ச்சனாவை வெறுப்பு ஏற்றிய நிக்சன்

வைல்ட் கார்டு போட்டியாளர்களாக உள்ளே வந்த அன்ன பாரதி, கானா பாலா மற்றும் பிராவோ ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், நிக்சன் அர்ச்சனா மற்றும் தினேஷை தான் மறைமுகமாக தாக்குகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. அவரை அடுத்து ஸ்டெல்லா டீச்சர் கேரக்டரில் உள்ளே வந்த அர்ச்சனா மாயாவின் முகத்திரையை மொத்தமாய் கிழித்து விட்டார்.

அதாவது இந்த பிக் பாஸ் வீட்டில் ஒரு சிலர் கும்பலாக விளையாடுகிறேன் என்ற பெயரில் மற்றவர்களை தங்களுடைய ஆதாயத்திற்காக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் சொல்வதை தான் மற்றவர்கள் செய்கிறார்கள். வாரவாரம் நாமினேஷன் நடப்பது கூட அவர்கள் யாரை சொல்கிறார்களோ அவரை தான் நாமினேட் செய்து வருகிறார்கள் அந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள்.

பிக் பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாக கூட்டமாக விளையாடிக் கொண்டிருப்பவர்கள் தான் ஒன்றன்பின் ஒன்றாக எலிமினேஷன் ஆகிக்கொண்டே இருக்கிறார்கள். இதிலிருந்தாவது நீங்கள் செய்வது தவறு என்று புரிந்து கொள்ளுங்கள். தனியாக விளையாடுங்கள், நேர்மையாக விளையாடுங்கள் என்று அர்ச்சனா சொன்னதோடு, அடுத்தடுத்து மாயா கூட்டணியில் இருப்பவர்கள் தான் வெளியேறப் போகிறார்கள் என்று மிரட்டியும் விட்டிருக்கிறார்.

Also Read:மிக்ஜாம் புயல் பிக்பாஸிலும் எதிரொலி.. எலிமினேஷனை குறித்து ஆண்டவர் எடுத்த முக்கிய முடிவு

Trending News