வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கலெக்டர் அர்ச்சனாவுக்கு செருப்பு மாட்டிவிடும் சந்தியா.. ஐபிஎஸ் ஆவதற்கு ஆப்பு வைத்த மாமியார்

விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் ஒருவழியாக சந்தியா போலீஸ் ஆகுவதற்கு மாமியார் சிவகாமி சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதன் பிறகு பிரச்சனை இல்லை என அனைவரும் பெரு மூச்சு விட்ட நிலையில், தற்போது புதிதாக சிவகாமியின் மாமியார் ரூபத்தில் பிரச்சனை எழுந்துள்ளது.

சந்தியா படித்து போலீஸ் ஆகிவிட்டால் குடும்பத்தில் அர்ச்சனாவிற்கு மதிப்பு மரியாதை இருக்காது என்பதால், அவரும் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என விரும்புகிறார். அதை நினைத்துக் கொண்டே உறங்கச் சென்ற அர்ச்சனாவிற்கு ஒரு கனவு வருகிறது.

அதில் அர்ச்சனா கலெக்டர் ஆனது போன்றும் போலீசாக இருக்கும் சந்தியாவை அவருடைய காலைப்பிடித்து செருப்பை அணிந்து விடும்படி அதிகாரம் செய்வது போன்றும் கனவு காண்கிறார். இதை கணவரிடம் சொல்ல அர்ச்சனாவை, ‘ஆசைப்படலாம் ஆனால் பேராசைப் படக் கூடாது’ என திட்டுகிறார்.

பிறகு வில்லத்தனமாக யோசிக்கும் அர்ச்சனா, சிவகாமியின் மாமியாரை ஊரிலிருந்து வர வைக்கிறார். சந்தியா, அர்ச்சனா இரு மருமகள்களும் உருட்டி மிரட்டும் சிவகாமி அவருடைய மாமியாருக்கும் பயந்து நடுங்குவார்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த சிவகாமி மாமியாரிடம் சந்தியா போலீஸ் ஆவது பற்றி கூறி தெரிய பிரச்சினையை அர்ச்சனா கிளப்பி விட்டார். சந்தியா போலீஸ் ஆன பிறகு சரவணனின் நிலை என்ன? என யோசித்து சிவகாமியின் மாமியார் சந்தியா போலீஸ் ஆவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்.

ஆனால் இதையெல்லாம் சந்தியா அசால்டாக சமாளித்து சிவகாமியின் மாமியாரிடம் நல்ல பெயர் வாங்கி அவரையும் சம்மதிக்க வைத்து விடுவார். முன்பு மாமியார் சிவகாமி சந்தியாவின் கனவிற்கு தடையாக இருந்தது போல், தற்போது சிவகாமியின் மாமியாரும் தடையாக மாறி அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலை நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

Trending News