ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அந்தர் பல்டி அடித்த அர்ச்சனா.. வாய் அடைத்துப் போன பூர்ணிமா, வயிற்று எரிச்சலில் கத்தும் மாயா

BB7 Tamil: ராஜா ராணி சீரியல் வில்லியாக மிரட்டிய அர்ச்சனா இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். ஆரம்பத்தில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிய இந்த அர்ச்சனா தான் இந்த விளையாட்டையே மாற்றப் போகிறார் என்பது அப்போது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அவருடைய என்ட்ரிக்குப் பிறகு மொத்த விளையாட்டு மாறிப் போய்விட்டது.

பிரதீப் ஆண்டனியின் எவிக்ஷன் மற்றும் அர்ச்சனாவின் என்ட்ரி என ஒரு எதிர்பாராத திருப்பம் இந்த சீசனில் நடந்தது. ஏற்கனவே போட்டியை நன்றாக கணித்துவிட்டு உள்ளே வந்த அர்ச்சனா யாரை எங்கு தட்டினால் கலகம் பிறக்கும் என்பதை சரியாக புரிந்து கொண்டு காய் நகர்த்த ஆரம்பித்தார். உண்மையை சொல்ல போனால் அர்ச்சனாவின் வரவுக்குப் பிறகு மாயா மற்றும் பூர்ணிமாவின் ஆட்டம் அடங்கத் தொடங்கியது.

இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய கட்டமான டிக்கெட் 2 பினாலே போட்டிக்கு அர்ச்சனா தகுதியானவர் இல்லை என வீட்டில் இருப்பவர்களால் முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் நேற்று தொடங்கப்பட்ட டான்ஸ் மாரத்தான் போட்டியில் அர்ச்சனா திமிரு பட ஈஸ்வரி கெட்டபில் நடித்திருந்தார். இந்த டாஸ்க்கில் யார் சிறப்பாக விளையாடினார்கள் என்று பிக் பாஸ் கேட்டபோது வீட்டில் இருந்த பெரும்பாலானவர்கள் அர்ச்சனாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

Also Read:திடுதிப்புன்னு நடந்த பிக்பாஸ் எவிக்சன்.. அர்த்த ராத்திரியில் மூட்டை முடிச்சை கட்டிய போட்டியாளர்

அர்ச்சனா டிக்கெட் 2 பினாலே வில் கலந்து கொள்ள முடியாது என்பதால், பிக் பாஸ் அவரிடம் இந்த விளையாட்டில் நீங்கள் பெற்ற பாயிண்ட்டை யாருக்கு கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். அர்ச்சனா, சிறிது நேரம் யோசித்து விட்டு தனக்கு கிடைத்த பாயிண்ட்டை பூர்ணிமாவுக்கு கொடுப்பதாக சொல்லிவிட்டார். இது வீட்டிலிருந்த எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.

வாயடைத்துப் போன பூர்ணிமா

மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் சேர்ந்து அர்ச்சனாவை டார்கெட் செய்து அடித்து வந்தார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது பூர்ணிமாவுக்கு அர்ச்சனா இந்த பாயிண்டை கொடுத்தது மாயாவுக்கு மிகப்பெரிய ஷாக்காக அமைந்தது. உங்களுடைய பேவரிட்சம் என்னுடைய கேமை பாதிக்கிறது என முகத்தில் அடித்தது போல் பேசிவிட்டார் மாயா.

இனி பூர்ணிமா அர்ச்சனாவை டார்கெட் செய்ய வாய்ப்பே இல்லை. அதே நேரத்தில், மாயா அர்ச்சனாவை டார்கெட் செய்யும் பொழுது பூர்ணிமா அதிலிருந்து விலகி விடுவார். இதனால் இவர்களுடைய கூட்டணி கண்டிப்பாக உடைந்து விடும். இவர்கள் இருவரும் தனியாகப் பிரிந்து விளையாடினால் தான் பிக் பாஸ் கேம் சூடு பிடிக்கும் என்பது எல்லோருடைய கருத்தாகவும் இருந்து வந்தது. தற்போது அர்ச்சனா அதற்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார்.

Also Read:என்ன நடந்தாலும் பார்த்துகிட்டு சும்மா இருக்க நா என்ன ஆண்டவரா.? நெற்றிக்கண்ணை திறந்து ருத்ரமூர்த்தியான பிக்பாஸ்

Trending News