வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

இந்த 5 காரணங்களால் மட்டுமே டைட்டில் வின்னர் ஆகிய அர்ச்சனா.. ஆனாலும் இதில் தோல்வி தான்

Bigg Boss Archana: விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடக்காத ஒரு விஷயம் சீசன் 7 இல் நடந்திருக்கிறது. அதாவது வைல்ட் கார்டு மூலமாக போன போட்டியாளர்கள் யாரும் வின்னர் ஆனதாக இல்லை. இதை மாற்றும் விதமாக அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆயிருக்கிறார். அப்படி என்றால் அங்கே இருந்த மற்ற போட்டியாளர்கள் டம்மியாகவும், அவர்களுடைய யுக்தி பிடிக்கவில்லை என்பதினால் தான்.

ஆரம்பத்தில் நல்லா தான் போய்க் கொண்டிருந்தது, ஆனால் எப்பொழுது பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி வைத்தார்களோ அதோடு இந்த நிகழ்ச்சியில் பெரிய சரிவு ஆரம்பித்துவிட்டது. அத்துடன் கமல் தீர்ப்பும் மக்களுக்கு சரியாகப் படவில்லை. இந்த சூழ்நிலையில் தான் வைல்ட் கார்டு மூலம் போன அர்ச்சனா கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டு யுத்தியை ஆரம்பித்தார்.

அந்த வகையில் அர்ச்சனா இந்த டைட்டில் வின் பண்ணியதற்கு முக்கியமான ஐந்து காரணங்கள் இருக்கிறது. அதாவது ஆரம்பத்தில் உள்ளே நுழைந்ததும், மாயா பூர்ணிமா அர்ச்சனா-விற்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுக்கவில்லை என்ற ஒரு விஷயத்தை பூதாகரமாக வெடிக்க வைத்தது. மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும், மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்று ஒரு விஷயத்தை மக்கள் மத்தியில் திணித்து விட்டார்.

Also read: பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் மொத்த சம்பளம்.. ஸ்பெஷலா கவனிச்சு அனுப்பிய விஜய் டிவி

அத்துடன் மாயா பூர்ணிமுடன் சேர்ந்து சில போட்டியாளர்கள் அர்ச்சனாவை டார்கெட் பண்ணி ஒதுக்க ஆரம்பித்தார்கள். அந்த நேரத்தில் அடிக்கடி அழுது கொண்டு ஆர்ப்பாட்டம் பண்ணி அனுதாபத்தை சம்பாதித்து விட்டார். அத்துடன் விசித்ராவுடன் கூட்டணி வைத்து மக்களை திசை திருப்பி விட்டார். இதனை தொடர்ந்து பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது தவறு என்ற ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்லி மக்களிடம் ஒரு பெயரை சம்பாதித்துக் கொண்டார்.

இதனால் மற்ற போட்டியாளர்கள் அர்ச்சனாவை டார்கெட் பண்ணி ஒதுக்க ஆரம்பித்ததால் மக்கள் அர்ச்சனா மீது அனுதாப பட ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் மாயா மற்றும் பூர்ணிமாவின் அலப்பறை எரிச்சலைப்படுத்தும் அளவிற்கு இருந்தது. அவர்களை எதிர்த்து பேசி அடக்கியதால் அர்ச்சனா ரொம்பவே பிரபலமாகிவிட்டார்.

மேலும் மாயா பூர்ணிமாவிற்கு, அர்ச்சனா பிடிக்காது என்பதால் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே அர்ச்சனா-விற்கு பலரும் சப்போர்ட் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இப்படித்தான் அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனார். என்னதான் அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனாலும் அவர் எப்பொழுதும் சொல்வது எனக்கு யாருமே உண்மையான நண்பர்கள் எங்கேயுமே கிடைக்க மாட்டார்கள் என்பதுதான். அந்த விதத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயும் சொல்லும்படி எந்த நட்பையும் அர்ச்சனா சம்பாதிக்க முடியாமல் இந்த விஷயத்தில் தோல்வி அடைந்து விட்டார்.

Also read: 2 நாள் கத்திட்டு மறந்திடுவாங்க.. டிஆர்பி வெறி பிடித்த விஜய் டிவி, மொத்த மானத்தையும் வாங்கிய பிக்பாஸ் 7

- Advertisement -spot_img

Trending News