Panipuri: என்னதான் வகை வகையான உணவுகள் ஆரோக்கியமாக சாப்பிட்டாலும் வாய்க்கு ருசியான சில உணவுகளை தேடி அலைந்து சாப்பிடுகிறோம். அதில் மாலை நேர சாட் ஐட்டங்கள். அப்படி சாட் ஐட்டத்தில் லிஸ்டில் முதலில் இருப்பது பானி பூரி தான். முன்னாடி எல்லாம் வடை பஜ்ஜி என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த காலங்கள் தற்போது மாறிக்கொண்டே வருகிறது.
அந்த வகையில் வட இந்திய உணவான பானி பூரியை விரும்பி சாப்பிடும் அளவிற்கு பலரும் அடிமையாகி விட்டார்கள். இந்த பானிபூரி ஆசையை தூண்டக்கூடிய அளவிற்கு நாக்கை ரொம்பவே ஆக்கிரமித்து வருகிறது. அதனால் இதை இளம் தலைமுறைகள் விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான சாட் உணவாக மாறிவிட்டது.
குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் கொஞ்சம் யோசிங்கள்
அந்த வகையில் இங்கே ஒரு பானிபூரி கடையை போட்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. அதிலும் சென்னையில் தெருவுக்கு தெரு இந்த பானிபூரி கடை அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் இந்த பானி பூரியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
அதனால் வீட்டில் இதை செய்ய முடிந்தாலும் தினமும் சாப்பிட வேண்டும் என்பதால் இதில் அதிக வேலைபாடு இருக்கிறது என்பதால் உடனே வெளியே போய் வாங்கி கொடுத்து விடுகிறார்கள்.
ஆனால் இதில் இருக்கும் பிரச்சனைகள் என்னவென்று தெரிந்தும் தெரியாதது போல் சாப்பிடுவதன் பல பிரச்சினைகளை உண்டாக்கி பெரிய ஆபத்துகளை விளைவிக்கிறது. அப்படி என்ன இந்த பானி பூரியில் பிரச்சனை இருக்கிறது. நம் கண் முன்னாடி தானே பண்ணி தருகிறார்கள் என்று பலரும் யோசிக்கிறார்கள்.
ஆனால் அதை தயாரித்துக் கொண்டு வருவது எப்படி என்று யாரும் சிந்திக்கவில்லை. அதாவது பானிபூரி விற்பனையாளர்கள் சுகாதாரமற்ற வடிகட்டப்படாத தண்ணீரை பயன்படுத்துகிறார்கள். இதனால் இரைப்பை பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு, நீர் மூலம் பரவும் நோய்கள், டைபாய்டு, மஞ்சள் காமாலை மற்றும் வயிற்றுப்போக்கு வழிவகுக்கும், மோசமான சுகாதார மற்றும் முறையற்ற கையாளுதாலும் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அத்துடன் பானி பூரில் பயன்படுத்தும் சில ரசாயனங்கள் காலப்போக்கில் புற்றுநோயை உண்டாக்கும் அளவிற்கு பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு இருப்பதால் ஆரோக்கியம் அற்றதாக இருக்கலாம்.
மேலும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யும். அதனால் ஆசையை தூண்டக்கூடிய இந்த பானி பூரி சாப்பிட வேண்டும் என்றால் முடிந்த அளவு சுத்ததமாக இருக்கும் கடைகளில் சாப்பிடுவது அல்லது வீட்டில் எளிமையாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்து ஆரோக்கியத்தை வலுப்படுத்தலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு சில குறிப்புகள்
- ABC பவுடரை வீட்டில் எளிதாக பண்ணுவது எப்படி
- பாலுக்கு பதிலாக இந்த தேநீரை இரவு குடித்தால் போதும்
- 6 ரூபாய் செலவில் அதிக ஆரோக்கியம்