சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அடேங்கப்பா, ஞான ராஜசேகர் இயக்கிய படங்களா இதெல்லாம்? எல்லாமே எவர்கிரீன்

ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றும் ஞானராஜசேகரன் சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தால் படங்கள் இயக்கினார். அவர் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை. ரசிகர்களின் மனதில் கண்டிப்பாக இந்த படங்களுக்கு ஒரு இடம் உண்டு.

ஞானராஜசேகர் ஐ.ஏ.எஸ் இயக்கிய தனித்துவமான படங்கள்:

மோகமுள்: ஞானராஜசேகரன் இயக்கிய முதல் படம் மோகமுள். அக்காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய எழுத்தாளர் தி. ஜானகிராமனின் மோகமுள் நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இளையராஜா இசையமைத்தார். எவர் கிரீன் படமாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு இப்படம் மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

முகம்: சினிமாவில் நாசன் வில்லனாக நடித்து வந்தார். அவரை முகம் படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்தார். இப்படமும் கிளாசிக் படங்களின் வரிசையில் இடம்பிடித்தது.

பாரதியார்: மகாகவி பாராதியின் பயோபிக் படத்தை எடுக்கப் போவதாக கே.பாலச்சந்தர், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் அறிவித்தனர். அதை ஞானராஜசேகரன் செய்து காட்டினார். மராத்தி நடிகர் சாயாஜி ஷிண்டே பாரதியாராகவும், செல்லம்மாளாக தேவயானியும் நடித்தனர். 2000 ஆம் ஆண்டு வெளியான பாரதியார் படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற பாரதியாரின் கவிதைகளுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட்.

பெரியார்: சத்யராஜ், குஷ்பு, மனோரமா நடிப்பில் பெரியார் படத்தை இயக்கினார். வைரமுத்து பாடல்கள் எழுதினார். இப்படம் தெலுங்கில் ராமசாமி நாயக்கர் என்று டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

ராமானுஜன்: உலகப் புகழ்பெற்ற கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தார். ஞானராஜசேகர் எழுதி இயக்க, ஸ்ரீவத்சன் நடதூர், சுஷாந்த் தேசாய் நடித்திருந்தனர். தமிழ், ஆங்கிலத்தில் உருவான இப்படம்2014 ஆம் ஆண்டு இப்படம் ரிலீஸ் ஆனது.

இப்படி தனது ஒவ்வொரு படைப்புகள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ஞானராஜசேகரின் ஒவ்வொரு படைப்புகளும் எவர் கிரீன் படங்களாக அமைந்துள்ளன.

Trending News