புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தேவதையை அடித்து விரட்டிய நீ எல்லாம் ஒரு மனுசனா.. சக்தியை குத்தி கிழித்த பொண்டாட்டி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் ஆதரவை பெற்று தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அதிலும் குடும்பத்தில் உள்ளவர்களின் மூலமே குணசேகரனுக்கு எதிரான ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அப்பத்தாவின் சிறு தூண்டுதலின் மூலம் தற்பொழுது எதிர்நீச்சல் குடும்பமானது இரண்டு அணிகளாக பிரிந்து  உள்ளது. 

மேலும் ஜனனியை வைத்து கச்சிதமாக காய் நகர்த்திய அப்பத்தா, தான் நினைத்தது நடந்து கொண்டிருக்கிறது என்ற மன நிம்மதியில் இருந்து வருகிறார். அதிலும் சக்தி ஒரு வழியாக அண்ணனின், பெண்களுக்கு எதிரான கீழ் தனமான புத்தியில் இருந்து வெளிவந்த நிலையில் தற்பொழுது ஞானசேகரனும் அதனை புரிந்து கொண்டுள்ளார்.

Also Read: சன் டிவியை ஓரம் கட்டிவிட்டு சீரியலில் முதல் இடத்தைப் பிடித்த பிரபல தொலைக்காட்சி.! அதுவும் எந்த சீரியல் தெரியுமா

தற்பொழுது ஜனனிக்கு ஆதரவாக பேசி வரும் சக்தி ஒரு கட்டத்தில் அண்ணனின் பேச்சை கேட்டுக்கொண்டு, ஜனனியை அவமானப்படுத்தி வந்தார். தொடர்ந்து மனைவி என்று கூட பார்க்காமல் அவருக்கு எதிராக செயல்பட்டு அடித்து அனுப்பினார். இந்நிலையில் தேவதை என்று பேசி வருகிறார். ஆனால் இதற்கு முன் எதற்கு தேவதையை அடித்து வெளியே துரத்தினாய் என்பது போல்  தனது வார்த்தைகளால் பதிலடி கொடுத்துள்ளார் ஜனனி.

இதனைத் தொடர்ந்து சக்தி தான் சொந்த காலில் நின்று உழைத்து முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறார். அதிலும் தான் ஆதி குணசேகரன் உடைய தம்பி என்ற தனது நிலையை மறைத்து வேலையில் சேர்ந்து உள்ளார். உடன் பிறந்த சகோதரர் என்று கூட பாராமல் அவமானப்படுத்திய நிலையில் எப்படியாவது வாழ்க்கையில் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற உறுதியுடன் இருந்து வருகிறார்.

Also Read: சீரியலில் கூட ஆபாசம் முன்னணி தொலைகாட்சியை வெளுத்து வாங்கிய சின்மயி.!

இந்நிலையில் இனிமேலாவது அண்ணனை மட்டும் நம்பி வாழாமல் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்துள்ளார். மேலும் குணசேகரனின் நிழலில் இருந்து முற்றிலுமாக வெளியே வந்து விட்டார் ஞானம். ஆனாலும் அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் அண்ணன் பேசிய வார்த்தைகளை மட்டுமே, நினைத்துக் கொண்டு மனம் கலங்கிய நிலையிலேயே இருந்து வருகிறார்.

ஏற்கனவே ஆதிராவின் திருமணத்தின் மூலம் பெரும் பூகம்பமே வெடித்துள்ள நிலையில் குடும்பமே சில்லி சில்லியாக உடைந்துள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பிறந்த நாளை கொண்டாட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் ரேணுகா நடந்ததை நினைத்து மனம் நொந்து பேசியுள்ளார். குணசேகரனை விட்டு ஒரேடியாக பிரிந்துள்ள நிலையில் ஞானம் அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: முதல் மரியாதை ராதாவாக மாறிய கருப்பழகி.. சன் டிவி நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்

Trending News