திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

விஜய்யை பார்த்து பயமா? தவெக தலைவரை சீண்டிய அண்ணாமலை.. சூடு பிடிக்கும் அரசியல் களம்

தமிழ்நாடு அரசியல் களம் எப்போதும் இருப்பதைவிட, தேர்தல் காலத்தில் தான் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால் இப்போது பரப்பு தொற்றிக் கொண்டதற்குக் காரணம், நடிகர் விஜயின் அரசியல் வருகைதான். மற்ற மாநிலங்களை விட புதிய கட்சியை எல்லாம் உடனே தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுவிட மாட்டர் என்பது எல்லோருக்குமே தெரியும்.

அந்தளவுக்கு அரசியல் புரிதல், கள நிலவரத்தை எல்லாம் அறிந்தவர்கதான் தமிழ் நாட்டு மக்கள். ஏனென்றால் அது திராவிட கட்சிகள் ஏற்படுத்திய தாக்கம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு மக்களின் உணர்வுகளோடு அந்த இயக்கம் கலந்திருக்கிறது. வாழ்க்கையோடும் பிணைந்திருக்கிறது. இருப்பினும், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி, அக்டோபர் 27 ஆம் தேதி 8 லட்சம் தொண்டர்களும் முதல் மாநாட்டை நடத்திக் காட்டிய விஜய் பற்றி பலரும் பேசி வருகின்றனர்.

தவெகவின் கொள்கைகள், விஜய் தன் கட்சியைப் பலப்படுத்த செய்து வரும் யோசனைகள் பற்றி பல அரசியல் கட்சிகள் பேசி வருவதுடன் மீடியாக்களில் விவாதமும் எழுந்து வருகிறது. இதற்கிடையே வரும் தேர்தலை ஒட்டி விஜய் நிர்வாகிகளை நியமிப்பதும், வாக்காளர் முகாம்கள் நடத்துவதுவாக துறுதுறுப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், விஜய்யி தவெக வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும்? பாஜகவுடன், விசிகவுடன் கூட்டணி அமைக்குமா? எனக் கேள்வி எழுந்துள்ள நிலையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி விசிகவின் எல்லோருக்குமான தலைவர் என்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கவுள்ளார்.

இந்த நிலையில், லண்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை முடித்துவிட்டு, அங்கிருந்து விமானம் மூலமாக இன்று சென்னைக்கு வந்ததடைந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பாஜகவை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

விஜய்யை கண்டு பாஜகவுக்கு பயமா? அண்ணாமலை அதிரடி பேட்டி

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ’’சர்வதேச உறவு துறை சார்பில் நடத்தப்பட்ட கல்வி உதவித்தொகை திட்டத்தில் சேர்ந்து 3 மாதம் படித்தேன். பெரிய ஆளுமைகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரசியலில் இருப்பவர்கள் தங்களை சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் முதல் மா நாட்டில் பேசியது பற்றி நேரம் வரும் போது பேசுகிறேன். விஜய்யின் பேச்சு திராவிட சிந்தாந்தங்களைப் பற்றி இருக்கிறது.

அவரது கட்சி கொள்கை திராவிட கட்சிகளோடு தான் ஒத்துப் போகிறது. விஜயின் அரசியல் வருகையால் யருக்கு பாதிப்பு என்பது மக்களுக்குத் தெரியும். அக்டோபர் 28 ஆம் தேதிக்கு பின் எத்தனை முறை விஜய் வெளியே வந்தார். நடிப்பு வேறு, அரசியல் களம் வேறு. புதிதாக அரசியலுக்கு வருபவர்களைக் கண்டு பாஜக எப்போது பாஜக பயப்படுவதில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை, திமுகா, அதிமுக உள்ளிட்ட கட்சிகளையும் கட்சி தலைவர்களையும் பலமாக விமர்சித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யையும் அவர் விமர்சிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் எந்தக் கட்சி யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமையும் என்பதால், திருமாவளவன் சொன்னது போல் பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News