வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2025

எதிர்நீச்சல் 2 சீரியலில் கதிரிடம் இருக்கும் சொத்தை ஆட்டைய போட போகும் அறிவுக்கரசி.. நாமத்தை போட்ட குணசேகரன்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சொத்துக்கள் அனைத்தையும் தந்திரமாக கதிர் அவருடைய பெயருக்கு மாற்றி விட்டார். தற்போது குணசேகரிடம் நயா பைசா இல்லாதபடி வெத்துவேட்டாக தான் இருக்கிறார். இருந்தாலும் குணசேகரனின் சொத்து என்பதால் முறைப்படி அது அனைத்தும் தர்ஷனுக்கு தான் வந்து சேர வேண்டும்.

ஆனால் கதிர் தந்திரமாக பிளான் பண்ணி சொத்துக்கள் அனைத்தையும் அவர் பெயரில் வைத்திருக்கிறார் என்பதால் அறிவுக்கரசி அதை அபகரிப்பதற்காக பிளான் போட்டு விட்டார். அதன்படி குணசேகரிடம் மறைமுகமாக போஸ்டர் பெரியசாமி தர்ஷனுக்கு சேர வேண்டிய சொத்துக்கள் பற்றி கேட்க ஆரம்பித்து விட்டார். உடனே குணசேகரன் என் பையனுக்கு கொடுக்க வேண்டிய சொத்துக்கள் எல்லாத்தையும் கல்யாணத்தை ஒட்டி கொடுத்து தீர்வேன் என்று வாக்கு கொடுத்து இருக்கிறார்.

இதை எதிர்பார்க்காத கதிர் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்த நிலையில், சொத்துக்களை யாருக்கும் நான் கொடுக்க தயாராக இல்லை என்பதற்கு ஏற்ப கதிர் தீர்மானமாக இருக்கிறார். இதனால் கதிரை நம்ப வைத்து ஏமாற்றி சொத்துக்கள் அனைத்தையும் ஆட்டையை போட வேண்டும் என்று அறிவுக்கரசி கொஞ்சம் கொஞ்சமாக கதிர் மண்டையை கழுவுகிறார்.

ஆக மொத்தத்தில் குணசேகரன் அநியாயமாக சேர்த்து வைத்த சொத்துக்கள் அனைத்தையும் குணசேகரன் இடம் இருந்து ஏமாற்றி கதிர் தந்திரமாக வாங்கிக் கொண்டார். தற்போது கதிரிடமிருந்து ஆட்டைய போடுவதற்கு அறிவுக்கரசி மற்றும் போஸ்டர் பெரியசாமி ஸ்கெட்ச் போட்டு விட்டார்கள். கடைசியில் எல்லா சொத்துக்களையும் ஏமாந்து குணசேகரன் கதிரும் நடுத்தெருவில் நிற்கப் போகிறார்கள்.

இதற்கிடையில் நமக்கும் இந்த சொத்தில் பங்கு உண்டு என்ற நப்பாசையில் ஞானம், கதிர் மற்றும் குணசேகரன் பின்னாடி அலைகிறார். ஆனால் தற்போது போஸ்டர் பெரியசாமி வீட்டிற்கு வந்து சக்தி, தர்ஷனை பற்றி சொல்லிய நிலையில் கோபமடைந்த குணசேகரன் எல்லா சொத்துக்களையும் நான் கதிர் பெயருக்கு மட்டும் தான் எழுதி வைப்பேன் என்று தீர்மானமாக சொல்லி ஞானம் மற்றும் சக்திக்கு பெரிய நாமத்தை போட்டு விட போகிறார்.

Trending News