தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் தான் அர்ஜுன். இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்த இவர், சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
கண்ணோடு காண்பதெல்லாம்: பிரபுசாலமன் இயக்கத்தில் 1999 இல் வெளியான கண்ணோடு காண்பதெல்லாம் படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் சோனாலி பண்டர், சுசேந்திரா மற்றும் ருச்சிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சின்னா: 2005இல் சுந்தர் சி இயக்கிய படம் சின்னா. இப்படத்தில் அர்ஜுன், சினேகா, விஜயகுமார் நடித்திருந்தனர். இப்படம் கொடி என்ற பெயரில் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது.
கர்ணா: 1995 இல் செல்வா இயக்கத்தில் கர்ணா திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் அர்ஜுன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அர்ஜுனுக்கு ஜோடியாக ரஞ்சிதா நடித்திருந்தார். வணிக ரீதியாக இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
மங்காத்தா: 2011 ஆம் ஆண்டு தல அஜித்துடன் இணைந்து மங்காத்தா படத்தில் அர்ஜுன் நடித்து இருப்பார். இந்த படத்தின் இறுதிக் கட்டத்தில் தான் தெரிய வரும் அர்ஜூன் வித்தியாசமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை அஜித்திற்கு இதுபோன்ற ஒரு மாசான படம் வெளிவரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
இரும்புத்திரை: பி எஸ் மித்ரன் இயக்கத்தில் விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் 2018 இல் வெளியான திரைப்படம் இரும்புத்திரை. இப்படத்தில் விஷால், சமந்தா நடித்திருந்தார்கள். அர்ஜுன் வில்லனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடல்: மணிரத்னம் இயக்கி, தயாரித்த படம்தான் கடல். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். கடல் படத்தில் கௌதம் கார்த்திக், துளசி, அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ. இந்த படத்தில் கொடூர வில்லனா நடித்து மிரட்டினார். ஆனா படத்தின் கடைசியில் உயிரை விட்டார்.