Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாம்’ டைட்டில் டீசர்..

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாம்’ டைட்டில் டீசர்..

Arjun Das: அர்ஜுன் தாஸ் நடிப்பில் வயிறு குலுங்க வைக்கும் காமெடியா என்று எல்லோரும் ஆச்சரியப்படலாம். இதற்கு காரணம் தமிழ் சினிமாவின் அடுத்த ரகுவரன் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய குரல் மற்றும் உடல் தோற்றம் இருக்கும். ஆனால் […]

Arjun Das: அர்ஜுன் தாஸ் நடிப்பில் வயிறு குலுங்க வைக்கும் காமெடியா என்று எல்லோரும் ஆச்சரியப்படலாம். இதற்கு காரணம் தமிழ் சினிமாவின் அடுத்த ரகுவரன் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய குரல் மற்றும் உடல் தோற்றம் இருக்கும்.

ஆனால் அப்படிப்பட்ட மிரட்டல் வில்லனான ரகுவரனிடமே குணச்சித்திர கதாபாத்திரத்தை கொடுத்து நடிப்பை வாங்கிய திறமையான இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு இயக்குனரிடம் தான் வசமாக சிக்கி இருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

பாம்’ டைட்டில் டீசர்

பாம் என்ற தலைப்பை பார்த்ததும் ஏதோ அதிரடி ஆக்சன் திரில்லர் படம் போல என்று தோன்றலாம். அதுதான் இல்லை. நம் உடலில் இருந்து வெளியேறும் இயற்கையான காற்றை பாம் என்று சிறுவர்கள் சொல்லி கிண்டல் அடிப்பது உண்டு அதைத்தான் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் படத்தை இயக்கிய இயக்குனர் விஷால் வெங்கட் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சிங்கம் புலி, காளி வெங்கட் போன்றோர் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். வீடியோவின் ஆரம்பத்தில் காளி வெங்கட் இறந்து விடுவது போல் காட்டப்படுகிறது.

காளி வெங்கட் மகளைத்தான் அர்ஜுன் தாஸ் காதலிக்கிறார். அவருடைய இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் அர்ஜுன் தாஸ் அழுது கொண்டே அவருடைய கை கால்களை எல்லாம் தேய்த்து விட்டு பார்க்கிறார்.

ஒரு கட்டத்தில் உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து பின்பு அமைதியாக அழுது கொண்டிருக்கிறார். அப்போது காளி வெங்கட் உடம்பிலிருந்து சத்தம் கேட்கிறது. இந்த சத்தத்தை கேட்டதும் காளி வெங்கட் உயிருடன் இருப்பதாக அர்ஜுன் தாஸ் நினைக்கிறார்.

அதே நேரத்தில் காளி வெங்கட் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டு சிங்கம்புலி தன்னுடைய ஆட்களுடன் வருகிறார். அப்போது அர்ஜுன் தாஸ் நடந்ததை சொல்கிறார். அதை சிங்கம்புலி என்னது கு…சு விட்டானா என்று கேட்கும் ரியாக்சன் அல்டிமேட் ஆக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் எதையெதையோ வைத்து படங்கள் வந்தது. ஏன் யோசிக்க முடியாத கதையைக் கொண்ட பெருசு படம் கூட ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. ஆனால் இப்படி ஒரு கதை அமைப்பில் இரண்டு மணி நேர படத்தை எப்படி சொல்லப் போகிறார்கள் என்பது நிஜமாகவே ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாகிவிட்டது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.