செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

விஜய்யிடம் வாங்க வேண்டிய அடி.. கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன அர்ஜுன்

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார். வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் இந்த வருட இறுதியில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரும் வெற்றி அடைந்த இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆவலை தூண்டி உள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஆக்சன் கிங் அர்ஜுனிடம் கேட்டிருக்கிறார். இதற்கு முன்பாக மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அர்ஜுனிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

ஆனால் படத்தில் விஜய்யிடம் அடி வாங்கும் காட்சிகள் நிறைய இருப்பதால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று அர்ஜுன் மறுத்து விட்டாராம். அதன் பிறகு தான் விஜய் சேதுபதி அந்த கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார். மாஸ்டர் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதைப் பார்த்த பிறகு தான் அர்ஜுன் எவ்வளவு பெரிய ஹிட் படத்தை மிஸ் செய்து விட்டோம் என்று வருத்தப்பட்டு இருக்கிறார். அதனால் தற்போது லோகேஷ் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டதற்கு அர்ஜுன் எந்தவித யோசனையும் இல்லாமல் உடனே சம்மதித்து விட்டாராம்.

மேலும் லோகேஷ் படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் குறித்தும் கூறியிருக்கிறார். அதற்கு அர்ஜுன் ஹீரோவிடம் அடிவாங்கும் கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு காரணம் சமீப காலமாக அர்ஜுன் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரிய அளவில் மக்களிடம் ரீச் ஆகவில்லை. அதனால் அவர் தன்னுடைய மறுபிரவேசம் வேற லெவலில் இருக்க வேண்டும் என்று நல்ல கதைகளுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில் லோகேஷ் தளபதி 67 திரைப்படத்தை பற்றி கூறியதும் அர்ஜுன் உடனே சம்மதித்திருக்கிறார். விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், பிரித்விராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் நடிக்க இருப்பது குறிப்பிட்டத்தக்கது.

Trending News