திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மகளுடன் நடிக்க மறுத்ததால் பிரஸ் மீட் வைத்து அவமானப்படுத்திய அர்ஜுன்.. டென்ஷனாகி பதிலடி கொடுத்து நடிகர்

தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் தற்போது தெலுங்கு பக்கம் திரும்பி இருக்கிறார். அங்கு அவர் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா இந்த திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார்.

அப்படத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகர் விஷ்வக் சென் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் ஜெகபதிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இரு தினங்களுக்கு முன்பு அர்ஜுன் ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவர் படத்தின் ஹீரோ குறித்து பல குற்றச்சாட்டுகளை ஆவேசமாக முன் வைத்தார்.

Also read : 100 கோடி கொடுத்தாலும் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன்.. உச்சகட்ட கோபத்தில் அர்ஜுன் நடத்திய பிரஸ்மீட்

அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடக்க இருந்த நிலையில் ஹீரோ வரவில்லை என்றும் எத்தனையோ முறை போன் செய்து பார்த்தும் அவர் பதில் அளிக்கவில்லை என்றும் அர்ஜுன் கடுமையாக தெரிவித்து இருந்தார். மேலும் இது போன்ற அர்ப்பணிப்பு இல்லாத நடிகரை நான் பார்த்ததே கிடையாது. 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் இவரை போன்ற ஒரு நடிகருடன் நான் பணிபுரிய மாட்டேன். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை என்னுடைய படத்தில் நடிக்க வைக்க இருக்கிறேன் என்று காட்டத்துடன் தெரிவித்து இருந்தார்.

இது மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடிகர் விஷ்வக் சென் அர்ஜுனனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அதாவது நான் இதுவரை பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். எந்த திரைப்படத்திலும் நான் ஈடுபாடு இல்லாமல் கலந்து கொண்டது கிடையாது. அர்ஜுன் இயக்கும் திரைப்படத்தின் முதல் பாதி ஸ்கிரிப்ட் எனக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் தரப்பட்டது.

Also read : சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த அர்ஜுன்.. வேறு வழி இல்லாமல் மொக்க ஹீரோவை போட்ட தயாரிப்பாளர்

மேலும் இந்த படத்தில் கருத்து சொல்லவோ, ஆலோசனை கூறவோ எனக்கு சரியான வாய்ப்பு கொடுக்கவில்லை. இது மன அழுத்தத்தை கொடுக்கும் என்பதால் தான் நான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஒருபோதும் அந்த திரைப்படத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று நான் நினைத்தது கிடையாது. அர்ஜுனிடமிருந்து எனக்கு படத்தைப் பற்றி விவாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

மற்றபடி அர்ஜுனை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது. தற்போது இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியிருப்பதால் எனது தரப்பில் இருந்து நான் விளக்கம் அளித்துள்ளேன் என்றும், அர்ஜுன் இயக்கும் படத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரஸ்மீட் நடத்தும் போது அர்ஜுன் நடிகருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் கால் செய்ததற்கான ஆதாரங்களையும் காட்ட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகரின் விளக்கமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருப்பதால் உண்மை நிலவரம் என்ன என்பது யாருக்கும் சரிவர தெரியவில்லை. இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி புகார் கொடுத்து வருவது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு விதத்தில் இந்த விவகாரம் படத்திற்கான இலவச ப்ரமோஷன் ஆகவும் மாறி இருக்கிறது.

Also read : விஜய்யிடம் வாங்க வேண்டிய அடி.. கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன அர்ஜுன்

Trending News