வியாழக்கிழமை, நவம்பர் 21, 2024

விஷால் சினிமாவுக்கு வர காரணமா இருந்த ஆக்சன் ஹீரோ..  ஆறடி தம்பியை வளர்த்து விட்டு அட்ரஸ் இல்லாமல் போன பிரபலம் 

Arjun introduced Vishal in cinema and his first director dropout cine field: சினிமாவில் பலமான திரைப்பின்புலத்தைக் கொண்டு இருந்தாலும் உதவி இயக்குனராகவே தன் கேரியரை தொடங்கினார் விஷால். இன்று சர்ச்சை பேச்சுகளால் சந்தி சிரித்து போன துப்பறிவாளன் சினிமாவுக்கு வந்த புதிதில் “விஷால் மாதிரி மாப்பிள்ளை வேணும்” என்கிற அளவு கன்னியர்களின் உள்ளம் கவர்ந்த கண்ணனாக இருந்தார். 

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருக்கும் விஷால் தற்போது ஹரியின் இயக்கத்தில் ரத்தினம் படத்தில் பிசியாக உள்ளார். படத்தின் கதைக்கு தகுந்தவாறு தென்மாவட்டங்களை குறிவைத்து  ஷூட்டிங் நடைபெற்று வருவதால் அங்கு இருக்கும் உள்ளூர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து ரீலில் மட்டுமல்ல ரியல் ஹீரோவாகவும் திகழ்ந்து வருகிறார் விஷால். 

அரசியல் கனவுடன் இருக்கும் விஷாலுக்கு, அதற்கு பிள்ளையார் சுழி போடுவது போல் பல்வேறு உதவிகளை செய்து மக்களிடம் நெருங்கி வருகிறார் எனகொள்ளலாம். இன்று பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளுடன் முரட்டு சிங்கிளாக இருக்கும் விஷாலுக்கு அறிமுகம் கொடுத்தது ஆக்சன் ஹீரோ அர்ஜுன் தான். 

Also read:கமல், பாக்கியராஜ் செய்த தில்லாலங்கடி வேலை.. வசமாக சிக்கிக்கொண்ட சிவகார்த்திகேயன்

அர்ஜுன் நடித்த வேதம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமானார் விஷால். தயாரிப்பாளர் ஞானவேலுவின்  தலையீட்டினால் இயக்குனர் காந்தி கிருஷ்ணா மூலம் செல்லமே திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இத்திரைப்படத்திற்காக கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்று நடிகராக தன் பயணத்தை தொடர்ந்தார். 

ராமாயணத்தைப் போன்று சிறுவயது இராவணனிடம் இருந்து தன் மனைவியை மீட்கும் ராமனாக நடித்திருந்தார் ரகு என்கின்ற விஷால். இப்படம் விஷாலுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்ததோடு பெண்ரசிகர்கள் மத்தியில் பேவரைட் ஹீரோ அந்தஸ்தையும் பெற்று தந்தது. இதன்பின் சண்டக்கோழி, திமிரு என வெற்றி படங்களின் மூலம்  ஜெட் வேகத்தில் முன்னேறினார் விஷால். 

 ஆனால் செல்லமே படத்தில் விஷாலை அறிமுகப்படுத்திய இயக்குனர் காந்தி கிருஷ்ணாவோ செல்லமே வெற்றிக்கு பின் 5 ஆண்டுகள் கழித்து ஆனந்ததாண்டவம் இயக்கினார். விமர்சன ரீதியாக ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும் இயக்குனரின் கேரியர் சற்று தடுமாறித்தான் போனது. மீண்டும் அதே ஐந்து வருடம் கழித்து விக்ரம் நடித்த கரிகாலன் படத்தோடு காணாமல் போனார் இயக்குனர் காந்தி கிருஷ்ணா. 45 நாட்கள் நடந்திருந்த கரிகாலன் படப்பிடிப்பில்  கிராபிக்ஸ் செலவு அதிகமாகும் எனக் கருதி படம்பாதியிலேயே கைவிடப்பட்டது

Also read:சிவகார்த்திகேயனால் லலித்துக்கு வந்த ஆப்பு.. அடம்பிடித்து கறாராய் தனுஷ் செய்யும் அக்கப்போரு!

- Advertisement -spot_img

Trending News