வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இது டிவோர்ஸ் சீசனா? இல்ல பிரேக் அப் சீசனா? என்ன தான் ஆச்சு இந்த நடிகைகளுக்கு

பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம்  வருகிறார். அர்ஜுன் கபூரும், நடிகை மலாய்கா அரோராவும் காதலித்து வந்தார்கள்.

கடந்த 2018ம் ஆண்டில் இருந்து மலாய்காவும், அர்ஜுன் கபூரும் ஒன்றாக இருந்தார்கள்.  இவர்கள் இருவரும் ஒன்றாக பல இடங்களில் இருப்பது தொடர்பான புகைப்படங்கள் கொடாஅ அவ்வப்போது வைரலாகும்.  மேலும் இது தொடர்பான கேள்விக்கு, ஆம் நாங்கள் காதலிக்கிறோம் என்று ஒருநாள் கூறினார் அர்ஜுன் கபூர். 

இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் பிரிந்து விட்டார்கள் என்ற தகவல்களும் வளம் வந்தது.  அதற்க்கு பல நாட்களாக அமைதியாக பதிலளிக்காமல் இவர்கள் இருந்து வந்துள்ளனர்.  இப்படி இருக்க, சிறிது நாட்களுக்கு முன்பு, நாங்கள் ஒன்றாகத் தான் இருக்கிறோம் என்றார்கள். இந்நிலையில் அர்ஜுன் கபூருக்கும், மலாய்கா அரோராவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தற்போது மீண்டும் தகவல் வெளியானது.

இது டிவோர்ஸ் சீசனா?  இல்ல பிரேக் அப் சீசனா? 

மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் அர்ஜுன் கபூர். அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசினார் அர்ஜுன். அப்பொழுது ரசிகர்களோ மலாய்கா அரோரா பெயரை சத்தமாக சொன்னார்கள். அதை கேட்ட அர்ஜுனோ, தற்போது நான் சிங்கிள். ரிலாக்ஸ் பண்ணுங்க என்றார்.

இதை கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆகி, என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.  இதற்க்கு பதிலளிக்காமல் avoid செய்துள்ளார் அர்ஜுன் கபூர்.  மேலும் இதை கேட்ட ரசிகர்கள் இது என்ன  டிவோர்ஸ் சீசனா?  இல்ல பிரேக் அப் சீசனா?    என்ன தான் ஆச்சு இந்த நடிகர்களுக்கு.. காதல் மீதுள்ள நம்பிக்கையே போகிறது என்று கூறி வருகின்றனர். 

Trending News