ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

அர்ஜுனின் முதல் படமே இறுதியான பரிதாபம்.. 24 நாள் கோமாவில் இருந்து உயிரிழந்த 19 வயது நடிகை

ஆக்சன் கிங் ஆக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் அர்ஜுன் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனரும் கூட. அப்படி அவர் இயக்கத்தில் வெளிவந்த ஜெய்ஹிந்த், வேதம் உள்ளிட்ட பல திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அவ்வாறு அவர் இயக்கத்தில் உருவான ஒரு திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்த நடிகை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே உயிரிழந்த சம்பவம் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

கடந்த 1998 ஆம் ஆண்டு அர்ஜுன் இயக்கி நடித்த திரைப்படம் தான் தாயின் மணிக்கொடி. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நிவேதிதா ஜெயின். தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்திருக்கும் அவருக்கு தமிழில் இதுதான் முதல் திரைப்படம். 15 வயதிலேயே மிஸ் பெங்களூர் பட்டத்தை இவர் வென்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து மிஸ் இந்தியா போட்டியிலும் கலந்து கொள்ள இவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

Also read: மகளுடன் நடிக்க மறுத்ததால் பிரஸ் மீட் வைத்து அவமானப்படுத்திய அர்ஜுன்.. டென்ஷனாகி பதிலடி கொடுத்து நடிகர்

அந்த சமயத்தில் தான் இவருக்கு அர்ஜுன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த படியே இவர் அழகி போட்டிக்காக சில பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு நாள் அவர் கேட் வாக் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது வீட்டின் மாடியிலிருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்திருக்கிறார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அவருடைய பெற்றோர்கள் அனுமதித்திருக்கின்றனர்.

ஆனால் 35 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் அவர் கோமா நிலைக்கு சென்று இருக்கிறார். மருத்துவர்களும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனாலும் அவர் 24 நாட்கள் வரை கோமாவில் இருந்தபடியே சுயநினைவு வராமல் மரணம் அடைந்திருக்கிறார். அதாவது மே 17 1998 அன்று விபத்துக்குள்ளான அந்த நடிகை ஜூன் 10 அன்று இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

Also read: 100 கோடி கொடுத்தாலும் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன்.. உச்சகட்ட கோபத்தில் அர்ஜுன் நடத்திய பிரஸ்மீட்

இது படக்குழுவினர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. மேலும் தாயின் மணிக்கொடி படத்தில் அவர் சில காட்சிகள் தான் நடித்திருந்தபடியால் அவருடைய கதாபாத்திரம் படத்தில் இறந்து விடுவது போன்று காட்டப்பட்டது. அவர் இறந்து மூன்று மாதங்கள் கழித்து வெளியான அந்த திரைப்படம் வணிக ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

துரதிஷ்டவசமாக அந்த ஹீரோயினால் இந்த வெற்றியை கொண்டாட முடியாமல் போனது தான் பரிதாபம். இப்படி முதல் படமே அந்த நடிகைக்கு இறுதி படமாக முடிந்து விட்டது. இருப்பினும் அந்த படத்தில் அவர் அர்ஜுன் உடன் சேர்ந்து நடித்திருந்த ஒரு பாடல் இப்போது வரை 90ஸ் ரசிகர்களின் விருப்ப பாடலாக இருக்கிறது.

Also read: சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த அர்ஜுன்.. வேறு வழி இல்லாமல் மொக்க ஹீரோவை போட்ட தயாரிப்பாளர்

- Advertisement -spot_img

Trending News