வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பழைய போட்டியாளர்களை இறக்க போகும் பிக் பாஸ்.. சுனிதா Vs அர்னவ், யார் வருவாங்க உள்ள?

வைல்டு கார்டு எண்ட்ரிக்கு பின்னரும் ஆட்டம் சூடுபிடிக்கவில்லை. பிக்பாஸே நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களிடம் ஓப்பனாக சொல்லிவிட்டார், யாருமே இன்னும் இந்த வீட்டில் வாழ தொடங்கவில்லை என்று.

இதுக்கு முன்பு எந்த சீசனிலும் இப்படி மக்கள் கேட்க்கும் அளவுக்கு பிக் பாஸ் ஓப்பனாக அசிங்கப்படுத்தியது இல்லை. அந்த அளவிற்கு அந்த மனுஷனை இந்த போட்டியாளர்கள் கடுப்பேற்றியுள்ளார்கள். 8 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகிய 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர்

ரவீந்தர் ஒரு சிறப்பான ஆட்டக்காரர், ஆனால் அவரது ஆசை மனைவி, வேண்டொகோளால், ரவீந்தரை முதல் வாரமே பிக் பாஸ் எலிமினேட் செய்தது. சுவாரசியமே இல்லாத பிக்பாஸ் போட்டியாளர்களை வெளியேற்றும் விதமாக பிக்பாஸ் வீட்டில் வாரம் வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடக்கும். அப்படி வரும் ஞாயிற்றுக்கிழமை, அன்ஷிதா, ஜெப்ரி, தீபக், மஞ்சரி, சத்யா, ரஞ்சித் தவிர யாரோ ஒருவர் எலிமினேட் ஆவார்.

பழைய போட்டியாளர்களை இறக்கும் பிக் பாஸ்

இந்த நிலையில், என்ன செய்வது என்று குழம்பி போன பிக் பாஸ், தனது மொத்த மூளையையும் அடகு வைத்துவிட்டு, தற்போது, ஐயோ அம்மா என்று கத்திக்கொண்டு இருக்கிறது. மேலும் முக்கியமான ஒரு அதிரடி முடிவையும் எடுத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்க பிக்பாஸ் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதுதான் வைல்டு கார்டு எண்ட்ரி. இம்முறைய் பழைய போட்டியாளர்களை உள்ளே அனுப்பும் ஐடியாவில் உள்ளாராம் பிக் பாஸ். அந்த வகையில் இந்த சீசனில் இருந்து எலிமினேட் ஆனவர்களில் ஒருவரை மீண்டும் உள்ளே அனுப்பி ஆட்டத்தை பரபரப்பாக்கும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.

ஏற்கனவே அர்னவ் வைல்ட் கார்டு என்ட்ரிக்கு வெறிகொண்டு காத்திருந்தார். ஆனால் அவரை மூலையில் உட்கார வைத்துவிட்டது பிக் பாஸ். இந்த நிலையில், அன்ஷிதா சிறப்பான போட்டியாளர்களாக இருக்கும் நிலையில், அவர் நிம்மதியை குலைக்க இவரை மீண்டும் உள்ளே அனுப்புமா பிக் பாஸ்.. இல்லை சுனிதாவை அனுப்புமா-ன்னு பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்

Trending News